மேலும் அறிய
அதிமுக போராட்டத்தின் போது அனுமதி மீறி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகி 4 பேர் மீது வழக்கு பதிவு
மக்களுக்கு இடையூறு வகிக்கும் வகையில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகிகளான கலைச்செல்வம், பாண்டி, மூக்குரன், போஸ் உள்ளிட்ட 4 பேர் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மதுரையில் நேற்று முனிச்சாலை பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையில் அதிமுக போராட்டத்தின் போது அனுமதி மீறி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகி 4 பேர் மீது நேற்று வழக்கு பதிவு !
— arunchinna (@arunreporter92) December 14, 2022
Further reports to follow - @abpnadu @LPRABHAKARANPR3 | @ThanniSnake | @Yogesh_DMK | @ReeganJNR | @reportervignesh | @Vignesh_twitz | @SRajaJourno | @Cat__offi ..... pic.twitter.com/xODkjKzWih
ஆர்ப்பாட்டப் பகுதியில் அனுமதி மீறி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரை காவல்துறையினர் அகற்றக் கூறியதால் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களுக்கு இடையூறு வகிக்கும் வகையில் அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக நிர்வாகிகளான கலைச்செல்வம், பாண்டி, மூக்குரன், போஸ் உள்ளிட்ட 4 பேர் மீது தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க் பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















