மேலும் அறிய

இளைஞர் அஜித் உயிரிழக்க முக்கிய காரணமே இந்த விசயம் தான்.. மனித உரிமைக்கு எதிராக நடந்த சம்பவம் !

50 இடத்தில் காயங்கள்… மூளையில் ரத்தக்கசிவு… சிகரெட் எரிப்பு, அஜித் மீது நடந்தது மனிதமற்ற சித்திரவதை.

ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இதில் தெளிவாக இருக்கின்றன. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது.

அஜித் குமாருக்கு என்ன நடந்தது
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால், சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் தொடர்பான மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை, நெஞ்சை உறைய வைக்கும் அளவிற்கு, அவர் மீது செய்யப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் சித்திரவதையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், அஜித்குமாரின் உடலில் சுமார் 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் 12 சிராய்ப்பு காயங்கள் என்றும், மீதமுள்ளவை அனைத்தும் ரத்தக் கட்டு (கன்றிய  நிலையில் உள்ள காயங்கள்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது
 
இந்த காயங்கள் வெறும் வெளிப்படையான காயங்கள் அல்ல. ஒவ்வொன்றும் பல தாக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. ஒரே இடத்தில் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இதில் தெளிவாக இருக்கின்றன. காயங்கள் பல்வேறு கோணங்களில் உள்ளதால், பலர் சேர்ந்து பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்கியிருக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் வயிற்றின் நடுவே கம்பியால் குத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது, மிக அதிர்ச்சியளிக்கிறது. இது உயிருக்கு ஆபத்தான காயமாகக் கருதப்படுகிறது. மேலும் தலையில் (கபாலத்தில்) கம்பியால் அடிக்கப்பட்டதால், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும், இது மரணத்திற்கான முக்கியமான காரணமாக இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
கொலைக்கு தகுந்த விரைந்த நீதி கிடைக்குமா?
 
அத்துடன், சிகரெட் சூட்டால் எரித்துச் சித்திரவதை செய்யப்பட்டது பற்றிய தகவலும் மருத்துவ அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது மனித உரிமைகளுக்கே எதிரான சித்திரவதை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுப்படி, இந்த அளவிலான தாக்கங்கள், ஒரு விபத்தில் ஏற்பட்டவையாக இருக்க முடியாது. இது திட்டமிட்டு, தொடர்ந்து, பல மணி நேரங்கள் நடத்திய தீவிரமான காவல் சித்திரவதை என்றும், சட்டவிரோத விசாரணை மற்றும் படுகொலை என்றும் விவரிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு கோவில் வளாகத்துக்குள் நடந்த இந்த கொடூரச் சம்பவம், சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அஜித்குமாரின் கொலைக்கு தகுந்த விரைந்த நீதி கிடைக்குமா? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget