மேலும் அறிய
மதுரை மட்டுமல்ல.. தென் மாவட்டத்திற்கே மகிழ்ச்சியான செய்தி - அனைத்து ரயில் பாதைகளும் மின்சாரமாக மாற்றம் !
மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம் செய்யப்படுகிறது.

ரயில்
Source : તસવીર સોશિયલ મીડિયા
மதுரை கோட்டத்தில் இந்தப் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டதால் மதுரை கோட்டத்தில் 100% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன.
மதுரை கோட்டத்தின் சாதனைகள்
மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 69-வது ரயில்வே வார விழா கொண்டாடப்பட்ட போது பல்வேறு விசயங்கள் பகிரப்பட்டது. குறிப்பாக ரயில்வே ஊழியர்கள் ஒத்துழைப்பால் மதுரை கோட்டம் அதிகபட்சமாக ரூபாய் 1245 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. ரயில்களை வேகமாக இயக்குவதிலும், கால தாமதம் இல்லாமல் பயணித்ததிலும், ரயில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருமானத்தை அதிகரித்ததிலும் மதுரைக் கோட்டத்திற்கு ஒரு மைல் கல்லை தொட்டுள்ளது. ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கு லோகோ பைலட்டுகள் உரிய ஓய்வு எடுக்கும் வகையில் ஓடும் தொழிலாளர் தங்கும் அறைகள் பல்வேறு நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில் பாதைகளும் மின்சார பாதைகளாக மாற்றம் செய்யப்படவுள்ளது.
ரயில் பாதைகளும் மின்சார பாதை
மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயம் ஆக்கப்பட்டு விட்டன. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருக்கிறார்.
புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும்
இந்த ஆய்வு சனிக்கிழமை ராமநாதபுரத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு துவங்கி மதியம் 01.45 மணிக்கு ராமேஸ்வரத்தில் நிறைவு பெறும். பின்பு மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட சிறப்பு ரயில் மூலம் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் இடையே ரயில் வேக சோதனை நடைபெறும். எனவே ரயில் பாதை அருகே வசிக்கும் பொதுமக்கள் ரயில் பாதை அருகே செல்ல செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சோதனைக்காக புதிய மின் ரயில் பாதையில் 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்படும். ஆகவே பொதுமக்கள் இந்த ரயில் மின்சார வடத்தை நெருங்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதன்மை மின்சாரப் பொறியாளர் ஆய்வு செய்தார்
ரயில் நிலையங்கள், நடை மேம்பாலங்கள், பாலங்கள், கடவுப் பாதைகள், சுரங்க பாதைகள், சாலை மேம்பாலங்கள், ரயில் பாதை வளைவுகள், ரயில் பாதையில் இடையில் குறுக்கிடும் அரசு மின் விநியோக வடங்கள் போன்ற பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வடம் நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா என தலைமை முதன்மை மின்சாரப் பொறியாளர் ஆய்வு செய்வார். ஆய்வுக்குப் பின்பு அவர் அளிக்கும் அறிக்கையைப் பொருத்து, இந்தப் பகுதியில் ரயில்களுக்கு மின்சார என்ஜின் இணைத்து இயக்கப்படும். இந்தப் பாதையிலும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று விட்டதால் மதுரை கோட்டத்தில் 100% ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு விட்டன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















