மேலும் அறிய
Advertisement
Lok Sabha Election:அ.தி.மு.க. வேட்பாளர் வெளியிட்ட RTI ஆதாரமே எனக்கு சாட்சி - மதுரை சு.வெங்கடேசன் எம்.பி.
அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன் வெளியிட்ட ஆர்.டி.ஐ. ஆதாரமே எனக்கான சாட்சியம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருவிழா 2024
மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும், அ.தி.மு.க., சார்பில் டாக்டர் டாக்டர் சரவணனும் போட்டியிடுகின்றனர். பிற வேட்பாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் இருவரும் வெற்றியை நோக்கி தேர்தல் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் சரவணனுக்கு எதிராக சு.வெங்கடேசன் மீண்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சு.வெங்கடேசனின் அறிக்கை
அதில்..,”எமது தொகுதி மேம்பாட்டு நிதியில் 17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒரு ஆங்கில நாளிதழில் அதிமுக வேட்பாளர் சரவணன் தெரிவித்து இருந்தார். அதற்கு நான், 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட 17 கோடிகளில் 245 திட்டங்களுக்கு 16.96 கோடி வரை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் அளித்து இருந்தேன். அதற்கு விளக்கம் அளித்துள்ள சரவணன் ஒரு ஆர்.டி.ஐ பதிலை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த பதில் உண்மையில் அவருக்கான ஆதாரமாக இல்லை.
அந்த பதிலிலேயே 260 திட்டங்கள் 16.60 கோடிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், 228 திட்டங்கள் ரூ 15.26 கோடிகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது என்றும் 155 திட்டப் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அதே ஆர்.டி.ஐ தெரிவித்துள்ளது. அந்த ஆர்.டி.ஐ பதில் அக்டோபர் வரையிலான தகவல்களை மட்டுமே கொண்டுள்ளது. அதற்கு பிந்தைய 5 மாதங்களின் விவரம் அதில் இல்லை.
ஆகவே சரவணன் அவதூறை ஆரம்பித்து வைத்து அதை முடித்து வைத்தும் உள்ளார். ஆர்.டி.ஐ பதிலின் முழு விவரங்களை வெளியிடாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தது அவரின் பதிலிலேயே அம்பலமாகியுள்ளது. சட்ட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்த பின்னர் சரவணன் இந்த ஆர்.டி.ஐ ஆவணத்தை வெளியிட்டுள்ளார். 5 கோடிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டும் உண்மை அல்ல என்பது அவர் வெளியிட்டுள்ள ஆவணம் மூலமாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அநேகமாக அமலாக்க நிலையில் உள்ள எல்லா திட்டங்களிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்துப் பணிகளும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. உண்மையை எவராலும் மறைக்க இயலாது. ” என்று தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vegetable Price: வீக் எண்ட் என்ன சமையல்? காய்கறிகளின் விலையில் மாற்றமா? இன்றைய நிலவரம்..
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Lok Sabha Election: ”நாளை ஸ்டாலின் சிறையில் அடைக்கப்படலாம்” - ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி எச்சரிக்கை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion