விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
தமிழ்நாடு அரசின் ஆண்டு கடன் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.1588.07 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் : தமிழ்நாடு அரசின் ஆண்டு கடன் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் (MSME) வளர்ச்சிக்காக ரூ.1588.07 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடைவதை உறுதி செய்யும் விதமாக, விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
விழுப்புரத்தில் தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்
ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கினை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, இவற்றின் வளர்ச்சிக்காக 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆண்டு கடன் திட்ட அறிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னுரிமைக் கடன் பிரிவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1588.07 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 30.09.2025 அன்று இரண்டாம் காலாண்டு முடிவில் ரூ.949.96 கோடி கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்டு 59.82% இலக்கு எட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்ய தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டுமென மாவட்ட தொழில் மையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
MSME நிறுவனங்களுக்கான தொழிற்கடனோடு கலைஞர் கைவினைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழி தொழில்முனைவோர் மேம்பாட்டு மேம்பாட்டுத் திட்டம் இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு தொழிற்கடன் விழிப்புணர்வு முகாம் 17.12.2025 காலை 10 மணியளவில் ASG மஹால், புதிய பேருந்து நிலையம் எதிரில், சுதாகர் நகர், விழுப்புரத்தில் நடத்தப்படவுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அரசுத்துறைகள் தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றைப் பெறும் முறைகள் குறித்த விளக்கப் பதாகைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆர்வமுள்ளோர் தேவையான வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் பெறலாம். கடன் கோரி விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் பரிசீலிக்கவும் வழி வகை செய்யப்படும்.
ஆர்வமுள்ள தொழில் முனைவோர், வாணிகர், இளைஞர், மகளிர் மற்றும் ணவர்கள் திறன் மேம்பாடு, தகுதியும் வாய்ப்புமுள்ள தொழில் தொழில் வணிகத் திட்டங்களைக் கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருத்தல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் மற்றும் வாணிகம் தொடர்பான அத்தனை விஷயங்கள் குறித்தும் முறையான தகவலும் தெளிவும் பெறலாம்.
இம்முகாம் தொடர்பாகவும் கடன் பெறுதல் மற்றும் தொழில் தொடங்குதல் தொடர்பாகவும் மேலான விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் அவர்களை நேரடியாகவோ 9443728015 / 8925534035 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















