Madurai Wall Collapse: மதுரையில் கோர சம்பவம் - மழையால் சரிந்த சுவர், பாட்டி & பேரன் உட்பட 3 பேர் உயிரிழப்பு
Madurai Wall Collapse Accident: மதுரை திருப்பரங்குன்றம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Madurai Wall Collapse Accident: மதுரை திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பாட்டி, பேரன் உட்பட 3 பேர் பலி:
விபத்தில் உயிரிழந்தவர்கள் பாட்டி அம்மா பிள்ளை (65), பேரன் வீரமணி (10) மற்றும் பக்கத்து வீட்டு பெண் வெங்கட்டி (55) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சூழலில் திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த மூன்று பேரும் அக்கம்பக்கத்தினரால் வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வெங்கட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















