மேலும் அறிய

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபாரத் தளமாக அல்ல... - நீதிபதிகள்

தனியார் இணையதளம் மூலமாக கோயில் பெயர்களில் ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். கோயில் கோயிலாக இருக்க வேண்டும் கோயில் வழிபாட்டிற்கான தளம் வியாபார தளம் அல்ல” - நீதிபதிகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சைபர் கிரைமின் ADGP மற்றும் மத்திய அரசை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல முக்கிய கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கோயில்களுக்கு வெளிநாட்டில் இருந்து பலர் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இக்கோயில்களுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி அதற்கான ரசீதுகளை பெற்று செல்கின்றனர்.

வெளி மாவட்டங்கள், வெளியூர், வெளிநாட்டில் இருக்கும் பக்தர்கள் கோயில் இணையதளத்தில் உள்ள கணக்குகளில் பணத்தினை செலுத்துகின்றனர்.

தமிழகத்தில் முக்கியமாக உள்ள கோயில்களில் சில தனியார் இணையதள முகவரி வைத்து கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது குறித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் மடங்களில் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும் இணையதளம் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன் மற்றும் வெங்கடேஷ் ஆஜராகி தமிழகத்தின் பிரபலமான கோயில்கள் பெயரில் இணையதளங்கள் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.

அரசு தரப்பில், கோயில் பெயரில் தனியார் வைத்திருந்த இணையதள முகவரி முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

* தனியார் இணையதளம் மூலமாக கோயில் பெயர்களில் ஆயிரக்கணக்கில் இல்லாமல் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்.

* இதனை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோயில் கோவிலாக இருக்க வேண்டும் கோயில் வழிபாட்டிற்கான தளம் வியாபார தளம் அல்ல...

* கோயில் சிலருக்கானது அல்ல; மக்களுக்கானது.

எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் சைபர் கிரைமின் தமிழக கூடுதல் காவல்துறை தலைவர், மத்திய அரசு இந்த வழக்கில் எதிர் மனுதாரராக இணைத்தும் இந்த வழக்கை இதே போன்ற மற்றொரு சில வழக்குடன் இணைத்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget