பெரியகுளத்தில் பொதுத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
பெரியகுளம் முக்கிய விதிகள் வழியாக பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபயண விழிப்புணர்வு பேரணி -மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.வி. ஷஜுவனா தலைமையில் நடைபெற்றது.
தேர்தல் விழிப்புணர்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பெரியகுளம் நகராட்சி பகுதியில் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயண விழிப்புணர்வு பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஆர்.வி.சஜீவனா தலைமையில் இன்று காலை தொடங்கி விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது .
எடப்பாடி பழனிசாமி அரசியல் அமாவாசை - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
குறிப்பாக கடந்த கால தேர்தல்களில் குறைந்த அளவில் தேர்தல் வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கிலும் முதன்முறை வாக்காளர்கள் ,மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்திட ஊக்குவித்திடும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Breaking News LIVE: நாமக்கலில் ராஜ்நாத் சிங் வாகன பேரணி தொடங்கியது - பாஜக தொண்டர்கள் குவிந்தனர்
வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்:
அதன்படி, இன்றைய தினம் வாக்காளர் விழிப்புணர்வு நடைபயண பேரணியானது பெரியகுளம் நகரின் முக்கிய விதிகளான பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகில் துவங்கிய கச்சேரி ரோடு, அழகர்சாமிபுரம், விஆர்பி நாயுடு தெரு, வைத்தியநாதபுரம், புதிய பேருந்து நிலையம், கேஎஸ்கே கேண்டீன், பழைய பேருந்து நிலையம் முன்பு, தண்டுபாளையம், மூன்றாந்தல் பகுதியாக வந்து பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் ஊழியர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்
100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்
முன்னதாக பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கோலங்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வண்ணம் இட்டு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டார் .நடை பயணத்தின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் உறுதிமொழிகளை ஏற்றும் ஜனநாயக திருவிழாவில் கலந்துகொண்டு அனைவரும் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வலியுறுத்தினார் .இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி ,பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன், வட்டாட்சியர் அர்ஜுனன் ,தென்கரை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ,பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் , பெரியகுளம் நகராட்சி அலுவலர்கள் ,பணியாளர்கள் , உட்பட பலர் கலந்து கொண்டனர்