இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்
கரூர் மக்களவை தொகுதி பிஜேபி வேட்பாளரை ஆதரித்து தேசிய தலைவர் ஜே பி நாட்டா கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.
கரூரில் நடைபெற்ற பிஜேபி தேசிய தலைவர் ஜே.பி. நாட்டா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக எழுத்து சென்றனர். இதனால் பல சேர்கள் காலியாக கிடந்தது. காலி சேர்கள் மத்தியில் உரையற்றினார்.
ஏப்ரல் 19 -ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கரூர் மக்களவை தொகுதி பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து அக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நாட்டா கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.
தேசிய தலைவர் ஜே பி நட்டா பேசிக் கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் பலர் கூட்டம் கூட்டமாக எழுந்து சென்றனர். இதனால் பல பகுதியில் சேர்கள் காலியாக கிடந்தது கட்சி நிர்வாகிகள் தடுத்தும் மக்கள் அதை கேட்காமல் கலைந்து சென்றனர். காலி சேர்கள் மத்தியில் ஜே.பி. நட்டா உரையாற்றினார். கூட்டத்தில் ஜே.பி. நட்டா ஹந்தியில் பேசியதால் மக்களுக்கு புரியாமல் எழுந்து சென்றனர்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial