மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE: “இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர்” - மதிமுக தலைவர் வைகோ பரப்புரை
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Key Events
Background
- பிரதமர் மோடி மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மாலை 6.30 மணிக்கு சென்னை வரும் அவர் பாண்டி பஜார் ரோட்டில் நடக்கும் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். பிரதமர் மோடி வருகையால் சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் வாகன பேரணி நடக்கும் இடங்களில் இருப்பவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை களைகட்டியுள்ள நிலையில் டெல்லியில் இருந்து பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வாக்கு சேகரிக்க வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டில் 4 தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்நிலையில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வருகிறார். நாமக்கலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாகன பேரணியில் ஈடுபட்டு வாக்கு கேட்கவுள்ளார்.
- ஐபிஎல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியுடன் இன்று மோதுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று மீண்டும் பழைய ஃபார்மை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் அந்த அணி 2 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. அதேசமயம் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று பலமான அணியாக திகழ்கிறது.
- மக்களவை தேர்தலுக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருக்கும் 3 மக்களவை தொகுதிகளில் மொத்தம் 67 குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபடுகிறது.
20:51 PM (IST) • 08 Apr 2024
இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர் - மதிமுக தலைவர் வைகோ பரப்புரை
இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திர போர் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது என மதிமுக தலைவர் வைகோ தெரிவித்தார். தஞ்சாவூரில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
18:27 PM (IST) • 08 Apr 2024
தருமபுரியில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
— Udhay (@Udhaystalin) April 8, 2024
ஒரே இந்தியா என சொல்லிக்கொண்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சலுகைகளையும், ஆளாத… pic.twitter.com/pnL6KVoVeZ
18:23 PM (IST) • 08 Apr 2024
முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவில் இருந்து விலகினார்
Former Union minister Birender Singh quits BJP, says he is joining Congress
— Press Trust of India (@PTI_News) April 8, 2024
18:23 PM (IST) • 08 Apr 2024
”மீனவர்களின் இன்னல்களை கண்டுகொள்ளாத கட்சி பாஜக”- இபிஎஸ் குற்றச்சாட்டு
மீனவர்களின் இன்னல்களை கண்டுகொள்ளாத கட்சி பாஜக என இபிஎஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து, இபிஎஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
17:54 PM (IST) • 08 Apr 2024
மயிலாடுதுறையில் சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை
மயிலாடுதுறையில் சிறுத்தையை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion