மேலும் அறிய

Chithirai Festival: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா; மதுரை மாவட்டத்துக்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது.

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

கள்ளளழகர் திருவிழா

மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம் (ஏப்.04) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம்.

இரண்டு ஆண்டு கொரொனா ஊரங்கைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கோலாகலமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெற்ற நிலையில், இந்த விழாவில் பெரும் திரளாக மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த வைபவத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார். 

உள்ளூர் விடுமுறை

இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகை அறிவித்தார். இச்சூழலில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக தங்கக்குதிரையில் கள்ளளழகர் ஆற்றில் இறங்கும் இடங்களில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், மதுரை மேயர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் நிகழ்வில் பாஸ் இருந்தால் மட்டுமே எவருக்கும் அனுமதி என்றும், அதிகாரிகள், பெரிய நபர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதற்காக அனுமதிக்கக்கூடாது எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது கள்ளளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை ஒட்டி வரும் வரும் மே 5ஆம் தேதி மதுரைக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

சித்திரைத் திருவிழா

முன்னதாக மதுரை சித்திரைத் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க கள்ளகழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வன்று தொடங்கி 5 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பாஜக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நேற்று முன் தினம் சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில், கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகேயுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

கொடி மரத்தின் முன்பாக மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சுவாமிக்கும், அம்மனும் பல்வேறு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது.

மேலும் படிக்க: CM MK Stalin: ”தமிழ்க் கனவு நிகழ்ச்சி இனி அனைத்து கல்லூரிகளிலும் ஆண்டுதோறும் நடைபெறும்” - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Doctors Fradulence : கடந்த 18 நாட்களில் மட்டும் இத்தனை போலி மருத்துவர்கள் கைதா..? காவல்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!Bussy Anand Inspection on Parandur : விஜய் போட்ட ப்ளான்.. பரந்தூர் போன புஸ்ஸி! 5 ஏக்கர் ரெடி!Bomb Saravanan: ”Armstrong கொலைக்கு பழிதீர்ப்பேன்”ஸ்கெட்ச் போட்ட பாம் சரவணன்!சுட்டுப்பிடித்த POLICEArvind Kejriwal :ஆண்களுக்கு FREE BUS! கெஜ்ரிவால் பக்கா ஸ்கெட்ச்! தலைவலியில் காங்கிரஸ் | Aam Aadmi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Train from Mandapam; பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்ப டிக்கெட் இல்லையா.? இந்த சிறப்பு ரயில்ல ட்ரை பண்ணுங்க...
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
இதை எந்த அரசாலும் செய்ய முடியாது! எது சாத்தியமோ அதை செய்வோம் - கனிமொழி சொல்வது என்ன?
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
குடையுடன் வெளியே போங்க.! 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
சாம்பியன் டிராஃபி தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! டீமில் யாரெல்லாம்! லிஸ்ட் 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - சஞ்சய் ராய் குற்றவாளி - வெளியான அதிரடி தீர்ப்பு 
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும்  குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Embed widget