மேலும் அறிய
Advertisement
ஆறு தமிழர் விடுதலை ; மதுரையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
ஆறு தமிழர் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடும்விதமாக மதுரையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஆறு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.ஆறு தமிழர் விடுதலை செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக மதுரையில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடிய ஆறு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு ! - @abpnadu#Madurai | @imanojprabakar | @thirumaofficial | #விடுதலை pic.twitter.com/1SBFxRLKnf
— arunchinna (@arunreporter92) November 11, 2022
இதனை வரவேற்கும் விதமாக மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள தமிழன்னை சிலைக்கு ஆறு தமிழர் விடுதலைக்கான கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் திராவிடர் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சாலையில் சென்ற பொதுமக்களுக்கு ஆறு தமிழர் விடுதலையை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். முன்னதாக தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தமிழக ஆளுநரை திரும்பப் பெற கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
தமிழ்நாடு
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion