மேலும் அறிய

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் தேனி கும்பக்கரை அருவி...!

’’கொரோனா நோய் தொற்று பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் குறையும் நிலையில் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்கின்ற மழைநீர் சிறு , குறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை ஆற்றை அடைந்து அருவியாக ஆர்ப்பரிக்கிறது, இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் தேனி கும்பக்கரை அருவி...!

மேலும் கும்பக்கரை அருவியில் குளித்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பல்வேறு மூலிகைச் செடிகள் நடுவில் கடந்து வரும் நீரில் குளிப்பதால் பல்வேறு நோய்களில் மீண்டு வர உதவுவதாக கூறுகின்றனர். மேலும்  கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து வரக்கூடிய நீரானது கடும் குளிர்ந்த் நிலையில்  இருப்பதால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு பெரும்பாலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த அருவியில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இயற்கை சூழலில் பசுமை நிறைந்த அடர்ந்த வனப் பகுதிகளுக்கு  நடுவில் இந்த அருவி அமைந்துள்ளதால் கும்பக்கரை வனப்பகுதியில் விலங்கினங்கள் காட்டுமாடு சிறுத்தை அரிய வகை குரங்கினங்கள், மான், புள்ளி மான், மிளா மான் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.

சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் தேனி கும்பக்கரை அருவி...!

பல்வேறு  வகையான மயில் உள்ளிட்ட பறவைகளும்  பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகளும் இந்த மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றது. அருவிக்கு வருகின்ற வழியில் சுற்றுலா பயணிகள் வன விலங்குகள் மற்றும் பறவைகளை காண்பதற்கு எளிதாகவும் கண்டு ரசிப்பதற்கு ஏதுவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் .  இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் வண்ணம் கும்பக்கரை அருவி பகுதியை  சுற்றிலும் தேவதானப்பட்டி வனத்துறையினரால் கம்பி வேலி அமைத்து வனவிலங்கு அச்சம் இன்றி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளது.


சுற்றுலா பயணிகளின் வருகைக்காக காத்திருக்கும் தேனி கும்பக்கரை அருவி...!

வனத்துறையினர் அருவியில்  குளிக்கின்ற பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் வனப்பகுதிக்குள் இருக்கும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வந்து செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுருளி அருவிக்கு அடுத்தபடியாக கும்பக்கரை அருவி உள்ளதால்  இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிரித்துள்ளது. தற்போது கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழக அரசு சுற்றுலாத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் குறையும் நிலையில் அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்படும் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகள் வருகைக்காக காத்திருப்பது போல் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. 

 

தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!

தலைப்பு செய்திகள்

விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget