kodaikanal: கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்; இன்று முதல் அமல்
உயர் நீதிமன்றம் கொடைக்கானலில் ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடையும் விதித்திருந்தது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
ஒரே விமானத்தில் முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ரவி பயணம்... மதுரையில் பாதுகாப்பு தீவிரம்
குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பாட்டில்கள், தின்பண்டங்களில் அதிகளவில் நெகிழி பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே கொடைக்கானல் நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் பயன்படுத்துவது குறிப்பாக கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தடுக்க பசுமை வரி விதிமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Watch Video: பாவம்! தாயைப் பிரிந்த தவிப்பு! வாகனங்களை வழிமறித்த குட்டியானை - பாருங்க
சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு தங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை வனப்பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் வீசி செல்கின்றனர். தொடர்ந்து உயர் நீதிமன்றம் கொடைக்கானலில் ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடையும் விதித்திருந்தது. மேலும்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று முதல் கொடைக்கானலில் பசுமை வரி விதிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக கொடைக்கானல் வரக்கூடிய பேருந்துகள் மற்றும் வாகனங்களை கொடைக்கானல் நகராட்சி சுகாதாரப் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு நெகிழி பாட்டில்கள் வைத்திருப்பவர்களுக்கு பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் அபராதத்தை விதித்து வருகிறார்கள். தற்போது ஏரி சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் கேரளா பேருந்துகளில் சோதனை நடைபெற்றது. சோதனையில் அவர்களிடம் இருந்து பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சியில் உள்ள சோதனை சாவடியில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களையும் சோதனையிட்டு பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கொண்டு வருகின்றனரா என சோதனை செய்து வருகின்றனர் .