கொடைக்கானலில் புதிதாக சாலை அமைக்கவில்லை; மண்சாலையே தார்சாலையாக அமைக்கப்படுகிறது - சாலை அமைக்க தடை கோரிய வழக்கில் வாதம்
வனம் வழியாக எந்த புதிய சாலையும் அமைக்கப்படவில்லை. நீண்ட ஆண்டுகளாக தார்சாலை வசதி இல்லாத வெள்ளகவி கிராமத்தின் மண் சாலையை தார்சாலையாக மாற்றும் பணியே நடக்கிறது" என தெரிவிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை பதிவாளர் அலுவலக உதவியாளர் சந்திரசேகரன் , தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியத்திற்கு ஒரு கடிதம் வந்துள்ளது.அதனஅடிப்படையில், இந்த வழக்கை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பதாகக் கூறி விசாரித்த தனிநீதிபதி வழக்கு குறித்து பதிவுத்துறை செயலர், தஞ்சை ஆட்சியர், பதிவுத்துறை ஐஜி, லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் சந்திரசேகரன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசுத் தரப்பில், சந்திரசேகரன் மீது ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில், நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்பாகவே இரண்டு குற்றச்சாட்டு குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ளன. சந்திரசேகர் மீது புகார் அனுப்பிய மதுரையைச் சேர்ந்த முன்னாள் பதிவாளர் பாக்கியம் சிக்கந்தர் என்பவர் மீதான புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘இது தொடர்பான புகார்கள் கடிதமாக வந்தால், நிர்வாக நீதிபதி மூலம் தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும். ஆனால், பணியாளர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்போது, பொதுநல மனுவைப் போல உத்தரவிட முடியாது. எனவே, கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.