‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தாக்கம்; குணா குகை பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் - கொடைக்கானலில் நடந்தது என்ன?
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள குணா குகை பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு நுழைந்த மூன்று இளைஞர்கள் வனத்துறையினரால் கைது.
கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தளமாக உள்ள குணா குகை பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு நுழைந்த மூன்று இளைஞர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கம். மேலும், கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து இருந்த நிலையில் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மலையாள மொழியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க கூடிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் குணா குகையை மையமாக வைத்து எடுத்த படமாகும். குகையில் விழுந்த தன்னுடைய நண்பனை காப்பாற்றக்கூடிய காட்சிகளை சிறப்பாக காண்பித்து இருக்கக்கூடிய இத்திரைப்படம் குணா குகை மீண்டும் பிரபலமாக துவங்கி இருக்கிறது .
Haryana CM: ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா - அமைச்சரவை கூண்டோடு கலைப்பு
இந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குணா குகையை கண்டு ரசித்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குகைக்கு செல்லக்கூடிய பகுதி முழுவதுமாக வனத்துறை சார்பாக மூடப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் மேலிருந்து இயற்கை காட்சிகளை பார்க்கக் கூடிய வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஊர்வலத்தில் நடந்த சோகம்! லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி!
இந்நிலையில் தற்போது இப்படத்தின் மோகத்தால் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களான கிருஷ்ணகிரியை சேர்ந்த விஜய், பாரத் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூன்று பேர் குணா குகை பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் எடுக்கும் பொழுது கடந்த ஆண்டு வந்த படக்குழுவினர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை விட நீண்ட தூரம் சென்று படம் எடுத்ததாக கூறப்பட்டது அப்போது பெரும் சர்ச்சையாக கிளம்பி நிலையில், வனத்துறை சேர்ந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சென்றனர். பிறகு தடையை மீறி சென்ற பட குழுவினருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து குகைக்குள் போக முயன்றவர்கள் வனத்துறை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.