திண்டுக்கல் : கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. தாளாளர் ஜோதிமுருகன் சிறையில் அடைப்பு
சரணடைந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கல்லூரி தாளாளரை கைது செய்ய போலீசார் செல்வதற்குள் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கோர்ட்டில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜோதிமுருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் தாடிக்கொம்பு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அவரை திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் போளூர் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தாடிக்கொம்பு போலீசார் அனுமதி கேட்டனர். அதன்பேரில் கல்லூரி தாளாளரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஜோதிமுருகனை போலீசார் காவலில் எடுத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது முடிவடைந்து திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர் டிசம்பர் 10 ஆம் தேதி வரை பழனி கிளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் அதன்பேரில் பழனி சிறையில் ஜோதிமுருகன் அடைக்கப்பட்டார்.
மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க