மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய வேத பாடசாலை மாணவர்கள்.. பொறுப்பாளரின் அலட்சியமே காரணம் என நீதிபதி கருத்து !

மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் அதிர்வலைகளை கிளப்பியது.

திருச்சி ஸ்ரீமன் டிரஸ்ட் பட்டர்  வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த வழக்கு, வேதச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவின் கவன குறைவு அலட்சியம் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது - நீதிபதி கருத்து. இவரின் காவல் துறையின் விசாரணை முக்கியம் என்பதால்  இவருக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நிறுவனர் பத்ரி நாராயணனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கியும் உத்தரவு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீமன் டிரஸ்ட் பட்டர் ஆசிரமத்தில் வேத  பாடசாலையின் நிறுவனர் பத்ரி நாராயணன், பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமீன் கோரி மனுவினை தாக்கல் செய்திருந்தனர். திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கோவில் அர்ச்சகருக்கு வேதம்  படிக்க இந்த வேத பாட சாலையில்  தங்கி பல மாணவர்கள்  வேதம் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சிறுவர்கள் விஷ்ணு பிரசாத் , ஹரி பிரசாத்,ஆந்திராவை சேர்ந்த அபிராம் ஆகிய மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மூன்று மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெறும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த சம்பவம் குறித்து பெற்றோர் திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குருகுலத்தின் நிறுவனரும், பொறுப்பாளர் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று  மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய வேத பாடசாலை மாணவர்கள்.. பொறுப்பாளரின் அலட்சியமே காரணம் என நீதிபதி கருத்து !

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேதச்சாலையில் தங்கி படிக்கும் மாணவர்கள்
கொள்ளிடம் ஆற்றில் சந்தியாவந்தனம் செய்து வருகின்றனர்.  துரதிர்ஷ்டவசமாக, காவிரி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு துரதிருஷ்டவசமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவே இருவருக்கும் இதில் சம்பந்தம் இல்லை எனவே முன்ஜாமின் வழங்க வேண்டும் என வாதிட்டர்.

அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் அன்பு நீதி வாதத்தின் போது வேதச்சாலையில் படிக்கும் மாணவர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர சொல்வது வழக்கம் சம்பவத்தன்று இறந்து போன மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுள்ளனர் எனவே இவர்களை தண்டிக்கும் விதமாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர சொல்லப்பட்டது தான் இந்த உயிரிழப்பு நடைபெற்றுள்ளது இது அங்கு படித்த மாணவர்களிடம் விசாரணை செய்தது வாக்கு மூலமாக பெறப்பட்டுள்ளது என தெரிவித்து இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய வேத பாடசாலை மாணவர்கள்.. பொறுப்பாளரின் அலட்சியமே காரணம் என நீதிபதி கருத்து !

இரண்டு தரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக உள்ள வேதச்சாலையின் பொறுப்பாளர் ஸ்ரீநிவாசராவின் கவன குறைவு அலட்சியம் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது என தெரிகிறது. எனவே, இவரை காவல்துறையினர் காவல் எடுத்து விசாரணை என்பது முக்கியமாக   உள்ளதால் இவருக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டார். முதல் மனுதார் நிறுவனர் பத்ரி நாராயணனுக்கு  நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone LIVE: மக்களே உஷார்! உருவாகும் ஃபெங்கல் புயல்.. வெளுக்க போகும் மழை
Fengal Cyclone :  வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
Fengal Cyclone : வானிலையில் ஏற்பட்ட திடீர் டிவிஸ்ட்.. உருவாகும் ஃபெங்கல் புயல்.. வானிலை மையம் தகவல்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Jobs: தேர்வே கிடையாது; தமிழக பொதுப்பணி துறையில் 760 காலியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Schools Colleges Holiday: எங்கெல்லாம் மழை? - எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை - மொத்த லிஸ்ட் இதோ!
Madurai: டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
டங்ஸ்டன் எடுக்க எதிர்ப்பு - மேலூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
கூட்டு பாலியல் வன்கொடுமை! அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள்! - வேதனையின் உச்சிக்கு சென்ற நர்ஸ்! உபியில் கொடூரம்! 
Embed widget