மேலும் அறிய
கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடந்து முடிந்த முதல் ஜல்லிக்கட்டு
புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் களம் கண்ட காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கீழக்கரை ஜல்லிக்கட்டு
கீழக்கரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு முதலமைச்சர் துவக்கி வைக்க கோலாகலமாக நடந்து முடிந்தது.
478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு - பூவந்தியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் மற்றும் காளைக்கு தலா ஒரு மகேந்திரா தார் ஜீப் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபணம் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த காளை புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரின் காளைக்கு முதல் பரிசு கார் மற்றும் 1லட்சம் ரொக்க பரிசு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து போட்டியை பச்சைக்கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். போட்டிக்கான உறுதிமொழி ஏற்பு தொடங்கிய நிலையில் காலை 11 மணிக்கு போட்டியின் முதல் சுற்று தொடங்கியது.

இதில் 478 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 சுற்றுகளாக போட்டி நடைபெற்ற நிலையில் 5 சுற்றுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த மாடுபிடி வீரர்கள் 6 ஆவதாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு களம் கண்டனர். இதில் சிறப்பாக களம் கண்ட காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தி பகுதியை சேர்ந்த அபிசித்தர் என்ற மாடுபிடி வீரர் 10 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு முதல் பரிசாக மகேந்திரா தார் கார் மற்றும் அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரருக்கான 2ஆம் பரிசாக சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் ஆகிய இருவரும் 6 காளைகளை அடக்கிய நிலையில் தலா 75 ஆயிரம் காசோலைகளும், பைக் இருவருக்கும் பகிர்ந்தும் அளிக்கப்பட்டது. 3ஆம் பரிசு மணிகண்டன் என்ற மாடுபிடி வீரருக்கு 50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதேபோன்று போட்டியில் சிறந்தகாளைகளாக முதலாவது இடம் : புதுக்கோட்டை மங்கதேவன்பட்டி கணேஷ் கருப்பையா என்பவரது காளைக்கு ஒரு தார் ஜீப் மற்றும் 1 லட்சம் காசோலையும், 2ஆம் இடம் : திருச்சி அணைக்கரை வினோத் காளை என்பவருக்கு பைக் மற்றும் 75ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

3ஆம் இடம். மதுரை அண்ணாநகர் பிரேம் ஜெட்லி என்பவது காளைக்கு 50ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கும் தங்கம் மோதிரம், தங்க நாணயங்கள் முதல் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டது. காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen: மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வணிகம்
உலகம்
உலகம்
செங்கல்பட்டு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion