மேலும் அறிய
Advertisement
Jallikattu 2024: உலகப் புகழ் பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள்...மாடுபிடி வீரர்கள், காளைகள் குறித்த அறிவிப்பு விரைவில்
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15-ஆம் தேதியும் பாலமேடு ஜல்லிக்கட்டு 16-ஆம் தேதியும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதியும் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலகப் பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில், 2024 பொங்கல் முன்னிட்டு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஜனவரி 15-ஆம் தேதியும் பாலமேடு ஜல்லிக்கட்டு 16-ஆம் தேதியும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது என மதுரை
மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வருடந்தோறும் தைத் திங்களில் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் அவனியாபுரத்தில் திருப்பரங்குன்றம் சாலையில் அமைந்துள்ள திடலில் 15-ஆம் (திங்கட்கிழமை) தேதியும், பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் 16-ஆம் (செவ்வாய் கிழமை) தேதியும் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17-ஆம் (புதன் கிழமை) தேதியும் நடைபெறவுள்ளது. வருடந்தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும் அந்தந்த இடங்களிலேயே இந்த வருடமும் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பதிவு குறித்து சம்மந்தப்பட்ட துறையின் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion