மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரை மாநகர் சொக்கிகுளம் பகுதியில் ரேஷன் கடையில் இருந்து மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வெளியான வீடியோவால் பரபரப்பு உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை.
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பெறவும், பொதுவிநியோகக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மலிவு விலை அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களைப் பெறவும் ரேஷன் அட்டை முக்கியமானதாகும். இது பல்வேறு இடங்களில் ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்படும் அட்டையாகும்.
ரேஷன் அரிசி
குடிமக்களுக்கான இந்த ரேஷன் அட்டையானது முன்பு பேப்பரில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸ்மார்ட் கார்ட் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடும்ப அட்டையில் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி உள்ளிட்ட பல தகவல்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை அடிப்படையில் வழங்கப்படும் ரேஷன் அரிசி வெளியூர்களுக்கு கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர் சொக்கிகுளம் பகுதியில் ரேஷன் கடையில் இருந்து மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரிசி கடத்தல்
மதுரை மாநகர் சொக்கி குளம் ராமமூர்த்தி தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடையிலிருந்து, அரிசி மூட்டைகள் சட்ட விரோதமாக சரக்கு வாகனம் மூலமாக கடத்திச் செல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ரேஷன் கடைகளில் இருந்து மொத்தமாக மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி மூட்டைகளை ஒவ்வொரு கடைகளையும் தேடி தேடிச் சென்று எடுத்து வைத்திருப்பது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், மேலும் கடத்தப்பட்ட வாகனத்தின் முன்புறம் வாகன பதிவு எண் இல்லாமல் இருப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக வாகன ஓட்டுனரிடம் வீடியோ பதிவு செய்யும் நபர் கேட்கும் போது அவசர அவசரமாக வாகனத்தை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. ஒரே ரேஷன் கடையில் 10 மூட்டைகளுக்கு மேல் ரேஷன் அரிசி கடத்தப்படும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் உடந்தையாக உள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
புகார் எண்
ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்தும் மதுரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும். இதற்காக மாநில சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் இயங்கும் கூடுதல் டிஜிபி-ன் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Indian 2 Trailer: " தாத்தா வந்துட்டாரு" இந்தியன் 2 ட்ரெயிலர் ரிலீஸ்! ஆண்டவர் ரசிகர்கள் ஆனந்தம்!