மேலும் அறிய
Advertisement
Madurai Mayor : ஹேண்ட்பேகை சுமக்க தனி ஊழியர் நியமனமா? சர்ச்சைக்குள்ளான மதுரை மேயரின் செயல்..
மதுரை மாநகராட்சி மேயரின் ஹேன்ட் பேக்கை தூக்கி சுமக்க தனி ஊழியர் நியமனமா ? சர்ச்சைக்குள்ளான மேயரின் செயல்.
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன் வசந்த் பதவி வகித்துவருகிறார். இவர் பதவியேற்றத்தில் இருந்து இவரது கணவரின் ஆதரவாளர்கள் மேயரின் அறையை ஆக்கிரமித்து இருப்பது, கட்சி அலுவலகம் போல செயல்பட்டது, முதன்முறையாக மேயருக்கென தனி ஆலோசகரை நியமித்தது போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.
மதுரை மாநகராட்சி மேயரின் ஹேன்ட் பேக்கை தூக்கி சுமக்க தனி ஊழியர் நியமனமா? சர்ச்சைக்குள்ளான மேயரின் செயல்!#madurai #mayorindhirani #MaduraiCorporation #DMK @arunreporter92 pic.twitter.com/41sLzHGDLh
— Noble Reegan J (@ReeganJNR) November 4, 2022
மேலும் மாமன்ற கூட்டத்தில் தி.மு.க மாமன்ற உறுப்பினர்களே மேயர் தங்களது வார்டு பகுதியின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கூறி தி.மு.க., மாமன்ற உறுப்பினர்களே வெளிநடப்பு செய்தது, வணிகவரித்துறை அமைச்சரின் தொகுதியிலயே எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை என கூறி மேயருக்கு எதிராக போராட்டத் நடத்துவேன் என அமைச்சரே கூறும் வகையில் செயல்பட்டது , நகர சபை கூட்டத்தில் மேயரின் வார்டிலயே அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் கூறியது என நாள்தோறும் மதுரை மாநகராட்சி மேயரை சுற்றி ஏதேனும் ஒரு சர்ச்சை எழுந்துகொண்டே இருக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் புகார்களை பெறுவதற்கான அதிநவீன குறைதீர் மைய தொடக்கவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருகை தந்த நிலையில் அவரை, வரவேற்பதற்காக மேயர் இந்திராணி நீண்டநேரமாக பூங்கொத்துடன் காத்திருந்தார். அப்போது மேயர் இந்திராணியின் ஹேன்ட்பேக்(கைப்பை) கை மாநகராட்சி ஊழியர் ஒருவரிடம் கொடுத்த நிலையில் ஹேன்ட்பேக்கை வைத்துகொண்டே அவரும் நீண்டநேரமாக நின்றுகொண்டே இருந்தார்.
இதனையடுத்து நிதியமைச்சர் வந்தபோது அவருடன் மேயரும் லிப்டில் மேயரும் சென்ற நிலையில் ஹேண்ட்பேக்கை தூக்கிவந்த ஊழியர் ஹேன்ட்பேக்கை தூக்கிக்கொண்டு படிக்கட்டுகளில் மூச்சு இரைக்க 3-வது மாடிவரை ஓடிச்சென்றார். பின்னர் அங்கும் கையில் ஹேன்ட் பேக்குடன் ஊழியர் நின்றுகொண்டே இருந்தார். இதனையடுத்து நிகழ்ச்சி முடிந்து நிதியமைச்சரை மேயர் வழி அனுப்பியபோது மேயர் தனது ஹேன்ட் பேக்கை ஊழியரிடம் கேட்டபோது மேயர் அறையில் இருக்கிறது என கூறினார். இதனையடுத்து ஹேன்ட்பேக்கை எடுத்துவர மேயர் கூறியதால் அந்த ஊழியர் மூச்சிரைக்க ஓடிச்சென்று மீண்டும் ஹேன்ட்பேக்கை எடுத்துவந்து மேயரிடம் கொடுத்தார்.
இதனை வாங்கிகொண்டு மேயர் புறப்பட்டார். மேயரின் இந்த செயல் அங்குள்ள பணியாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மாநகராட்சி மேயரின் ஹேன்ட்பேக்கை தூக்கி சுமப்பதற்கு தனி ஊழியரா ? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு மேயரின் செயல்பாடு இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்ததால், அச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion