மேலும் அறிய
”நேற்று, இன்று, நாளை... நீட் தேர்வை என்றும் எதிர்ப்போம்” - மதுரையில் ஓ.பி.எஸ் பேட்டி !
தமிழகத்தில் நீட் தேர்வை அன்றும் எதிர்த்தோம் இன்றும் எதிர்க்கிறோம் நாளையும் எதிர்ப்போம்...மேலூரில் ஓபிஎஸ் பேட்டி.

ஓபன்னீர்செல்வம்
மதுரை மாவட்டம் மேலூரில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஊரக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் ”தமிழகத்தில் நீட் தேர்வை அன்றும் இன்றும் நாளையும் எதிர்ப்போம். நீட்டை பொறுத்தவரையில் தமிழகத்தில் விலக்கு அளிக்கும் வரை உறுதியாக அ.தி.மு.க எதிர்க்கும். நீட்டை தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டு இருக்கிறது”என்றார். மேலும் தமிழக ஆளுநரை திரும்ப பெறக்கோரி ஏராளமான அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுப்பது குறித்து கேள்வி எழுப்பிய போது, ”தமிழக ஆளுநர் இந்திய அரசியலமைப்பின்படி ஆளுநர் தனது பணிகளை செயல்படுத்தி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Urban Local Body Election: ‛கிருஷ்ணர் காப்பாற்றுவார்...’ சிலையோடு வந்து மனுத்தாக்கல் செய்த மதுரை காங்கிரஸ் வேட்பாளர்!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில்...,” கோவை மாவட்டத்திற்கு அதிகமான பாலம் , சாலை , கூட்டு குடிநீர் திட்டம் என மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் கொடுத்துள்ளோம். கோவை மாவட்டத்திற்கு 8 மாதமாக தி.மு.க அரசு எந்த உதவியும் நல திட்டமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் மாநகராட்சி மேயர் பதவி மட்டுமல்ல நகராட்சி பேரூராட்சிகளையும் அண்ணா தி.மு.க வெற்றி பெறும். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு எந்த நலத் திட்டத்தையும் வழங்காமல் முழுவதுமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை சோதனை என்ற பெயரில் மிரட்டுகிறது. அமைச்சர்களை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்றிய செயலாளர்களை தி.மு.க அரசு மிரட்டி வழக்கு போடும் நிலை தற்போது உள்ளது” எனவும் தெரிவித்தார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election | உள்ளாட்சி அரசியல் களத்தில் திருநங்கைகள் - நுண் அரசியலை விளக்கும் எழுத்தாளர் பிரியா பாபு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement