மேலும் அறிய

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை

காவலர் பணியிட மாற்றத்திற்கு கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு  தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கர்மா காரணத்தைக் கூறி அரசு துறை ஊழியர்களின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என அரசு தரப்பு வாதம் எழுந்தது. இதனை பதிவு செய்த நீதிபதிகள் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
 
மதுரை மாவட்டத்தை சேர்ந்த முருகன் மதுரை காவல்துறையில்  முதல் நிலை காவலராக பணியில் உள்ளார். இவர் பணியின் போது உரிய விடுப்பு கேட்காமல் விடுப்பு எடுத்துக் கொள்வது மற்றும் பணியில் கவன குறைவாக செயல்படுவது போன்ற காரணத்தால் 18 முறை தண்டிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் மதுரை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாற்றி மதுரை மாநகர காவல் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை
 
இந்த உத்தரவை  ரத்து செய்ய வேண்டும் என என உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  காவலர் முருகன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஸ்ரீமதி கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மனுதாரருக்கு இந்த கோர்ட்டு, நிவாரணம் வழங்க முனைகிறது. அதாவது, கர்மாவின் கொள்கைகளில் "சஞ்சித கர்மா" (முழு கர்மா) "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி) என்று பிரிக்கப்பட்டுள்ளது. "பிராரப்த கர்மா" (கர்மாவின் பகுதி)க்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது. 
 
இதன் அடிப்படையில் முதல் நிலைக் காவலர் பல தண்டனைகளை அனுபவித்து விட்டார். எனக்கூறி பணி மாற்றம் செய்த இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் மகேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Madurai High court: கர்மா அடிப்படையில் தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்கால தடை
 
விசாரணையின் போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி காவலர் இடமாற்றம் என்பது துறை ரீதியான நடவடிக்கை அதில் கர்மா அடிப்படையில் தனி நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார் இது ஏற்றுக்கொள்ள முடியாது மேலும் இந்த பதவியில் இந்த இடத்திற்கு மாற்ற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் காவலருக்கு பணி இட மாற்றம் குறித்து  தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தனர்.
 

 
கரூரில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், குவாரி உரிமையாளர் செல்வகுமாருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
 
கரூரில் மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிகளுக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுனர் சக்திவேல், கூலிப்படை கும்பலைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய மூவரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் குவாரி உரிமையாளர் செல்வகுமார் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இறந்த ஜெகநாதரின் தாயார் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என இடையிட்டு மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜாமீன் கோரி செல்வகுமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 

தலைப்பு செய்திகள்

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள்: ஒத்தக்கடை துர்நாற்றப் பகுதியானது!
மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இறைச்சி கழிவுகள்: ஒத்தக்கடை துர்நாற்றப் பகுதியானது!
விருதுநகர் உணவு பாதுகாப்பு கண்காட்சி: கலப்படத்தை கண்டறிய வழிகள்!
விருதுநகர் உணவு பாதுகாப்பு கண்காட்சி: கலப்படத்தை கண்டறிய வழிகள்!
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !
மதுரையில் பிரபல யூட்யூபர் மாரிதாஸ் சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர் !

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget