மேலும் அறிய

Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை

US Iran War: ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஏற்கனவே எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சற்று நேரத்திற்கு முன், இரு நாடுகளும் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்படும் வகையில், இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், முன்னதாக நெதன்யாகுவை ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலும் ஈரானும் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் வார்னிங்

ஏற்கனவே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று எச்சரித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சற்று நேரத்திற்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில், இரு நாடுகளும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு கூறி ஒரு பதிவை போட்டுள்ளார்.

ஏற்கனவே ட்ரம்ப் கூறியது என்ன.?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் ஈரானுடனான போர் தொடர்பாக தற்போது கடும் கருத்து வேறுபாட்டில் உள்ளனர். அமெரிக்கா முன்வைக்கும் எந்தவொரு சமரசத்தையும் நெதன்யாகு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஙரம்ப் தெளிவாகக் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவர, வாஷிங்டன் மேற்கொள்ளும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், டெஹ்ரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்றும், எல்லாவற்றையும் தாமே தீர்மானிப்பதாகவும், நெதன்யாகுவால் எதையும் தீர்மானிக்க முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் எட்டப்பட்ட நிலையற்ற போர்நிறுத்தத்தின் மிகக் கடுமையான மீறலாக, ஈரான் இஸ்ரேல் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவிய சிறிது நேரத்திலேயே, அமெரிக்க அதிபரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கிடையே, ஈரானுக்கு எதிராக பதிலடி கொடுக்க வேண்டாம் என்றும், பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறும், நெதன்யாகுவுக்கு அறிவுறுத்துவதாக ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ஆக்சியோஸ் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், ட்ரம்பின் நிலைப்பாடு இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.

ட்ரம்ப் நெதன்யாகுவிடம் கூறியது என்ன.? 

ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதால், சிறிது காலம் பொறுத்திருக்குமாறு ட்ரம்ப் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் கூறியதாக, ஒரு அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இஸ்ரேலிய தலைவர் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இறுதியில் பின்வாங்க ஒப்புக்கொண்டார். 

மேலும் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என எச்சரித்த ட்ரம்ப், மற்றொரு ராணுவ மோதல் நிலைமையை நீட்டிக்கவே செய்யும் என்று கூறினார். "பிபி அவர்களைத் திருப்பித் தாக்கினால், இது கடந்த 47 ஆண்டுகளைப் போலவோ அல்லது கடந்த 3,000 ஆண்டுகளைப் போலவோ தொடர்ந்துகொண்டே இருக்கும்," என்று அவர் கூறினார்.

ஈரான் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்கள், அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கான தனது விருப்பத்தை மாற்றவில்லை என்று ட்ரம்ப் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார். அது ஒப்பந்தத்தை பாதிக்காது என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Trump's Fee Plan-Students: யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
யோவ் ட்ரம்ப்பே.! மாணவர்கள கூட விட்டு வைக்க மாட்டியா.? US-ல் படித்து முடித்து வேலைக்கு சேர ரூ.1 கோடி ஃபீஸ்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget