மேலும் அறிய

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

கேரளாவில் மீண்டும்  முழு உடங்கு உத்தரவுகளை அமல்படுத்தி உள்ள நிலையில், இரு மாநில எல்லையில் கேரள போலீசார் கெடுபிடி காட்டுவதால், இரு மாநில மக்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. கொரோனா தொற்றின்  முதல் அலையை எளிதாக  கட்டுப்படுத்திய கேரளா, தற்போது உருவாகி உள்ள 2-வது அலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது . 
கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாட்டில் தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களில் கட்டுக்குள் வந்த நிலையிலும் கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு இன்றளவும் குறையவில்லை. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியே உள்ளது.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

ஒட்டுமொத்த இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நேற்று 43,509 ஆக இருந்தது. இதில் கேரளாவில் மட்டும் 22,056 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நாட்டில் கொரோனா பாதிப்பு சதவிகிதத்தில் 50 சதவீதத்தை தாண்டி உள்ளது. எனவே கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது.

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

மேலும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது கேரள மாநில அரசு. மேலும் இறப்பு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் 20-க்கும் குறைவான நபர்களே பங்கேற்க வேண்டுமென்று அறிவித்துள்ளது. இதனால்  தேனி மாவட்டத்தில் இருக்கும் தமிழக கேரள எல்லை பகுதியான குமுளி, கம்பம் மெட்டு போன்ற பகுதிகளில் கேரள போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டிலிருந்து  செல்லும் நபர்கள் கேரளாவிற்கு நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக,கேரள எல்லையில் கெடுபிடி  :-

 கேரளாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம்  தமிழக கேரள  எல்லைப்  பகுதியில் அமைந்துள்ள குமுளி மற்றும் கம்பம்மெட்டு வழியாக கேரளா செல்வதற்கு கேரள போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களிலும்,  இரு சக்கர வாகனங்களிலும் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு  வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் தோட்ட வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் முற்றிலுமாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

கேரளாவில் முழு ஊரடங்கு எதிரொலி - தமிழக கேரள எல்லையில் கெடுபிடி காட்டும் கேரள போலீசார் 

கேரள போலீஸார் இ பாஸ் மற்றும் கொரானா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், கொரோனோ இல்லை சான்றிதழ் மற்றும் உடல் வெப்ப பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்த பின்பே எல்லையில் அனுமதிக்கின்றனர்.  மேலும் கேரளத்திலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள்  இ பாஸ் மற்றும் வெப்ப பரிசோதனை செய்த பின்பு   தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். எல்லையில் கேரள அரசு மிகவும் கெடுபிடி காட்டுவதால் இருமாநில மக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget