மேலும் அறிய
பாம்புகள், எலிகளுடன் ஜெய் பீம் படத்திற்கு ஆதரவாக பழங்குடியின மக்கள் நூதன ஆர்ப்பாட்டம்...!
பாம்புகள், எலிகள், தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாம்புகளுடன் போராடிய பழங்குடியினர்
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர் நடிப்பிப் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியானது. பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மகக்ளுக்கு அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து அப்பட்டமாக பேசி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டர் வன்னியர்களின் குறியீடு என்று கூறி அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.கவினர் தொடர்ந்து ஜெய்பீம் படத்துக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு வந்தனர். மேலும் படத்தின் இயக்குநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர் நிலையில் நேற்றைய தினம் படத்தின் இயக்குநர் அது எதர்ச்சியாக நடைபெற்றது யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அப்படி புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 60,000 கன அடியில் இருந்து 40,000 கன அடியாக குறைந்தது
இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பழங்குடியினர் கூட்டமைப்பின் சார்பில் பழங்குடியின மக்கள் இணைந்து பாம்புகள், எலிகள், தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். தற்பொழுது சூர்யா எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்று ஆவேசமாக கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement