சூர்யாவுக்கு குரல் கொடுத்த நடிகர் நரேன்... மலையாளத்தில் மறுஉருவம் எடுக்கும் ஜெய் பீம்!
மலையாளத்தில் வெளிவர இருக்கும் 'ஜெய் பீம்' படத்திற்கு மலையாள நடிகர் நரேன் சூர்யா கதாபாத்திரத்திற்கு டப்பிங்கில் குரல் கொடுத்து வருகிறார்.
ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒளிவு மறைவுமின்றி எடுத்து வைத்திருக்கிறது.
அதேசமயம் ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாக வன்னியர் சங்கம் சார்பாக சூர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதுமட்டுமின்றி சூர்யா எங்கும் நடமாட முடியாது எனவும், அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பாமக மாவட்ட செயலாளர் பேசியதும், அதற்கு ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மௌனம் காப்பதும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த படத்தை பொறுத்தவரை பொதுமக்கள் முதல் ரசிகர்கள் என பலரும் நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், மொத்த திரையுலகமும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Jai Bhim is an important film, it also show how justice is delivered within the constitutional framework to the marginalised and gives hope to to one and all. So watch Jai Bhim.again To critique the film is fine but demand a ban and issue death threats is condemnable pic.twitter.com/xDr4c1VIN5
— Rajiv Menon (@DirRajivMenon) November 17, 2021
முன்னதாக, சூர்யாவுக்கு ஆதரவாக #WE Stand With Surya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், ஜெய்பீம் திரைப்படம் தமிழை தொடர்ந்து தற்போது மலையாளத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சூர்யா கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் நரேன் குரல் கொடுத்து வருகிறார். இவர் தமிழில் அஞ்சாதே, முகமூடி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து நரேன் தெரிவிக்கையில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு என்னை டப்பிங் பேச அழைத்தபோது உடனே ஒப்புக்கொண்டேன் .ஆனால், இந்த படத்தில் நான் நினைத்த மாதிரி இல்லாமல் மிகவும் சூர்யா கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியது மிகவும் சவாலாக இருந்தது என்றார்.
நடிகர் சூர்யா நடிப்பு, வசன உச்சரிப்பு மிக நுட்பமாக இருந்ததால் காட்சிக்குக் காட்சி கவனித்து பேசியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இது சினிமாவில் என்னை மேலும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. மலையாளத்தில் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும், இந்த படத்திற்கு வாய்ப்பு அளித்த சிபு பற்றும் ஜாலி ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றி. ஜெய் பீம்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்