மேலும் அறிய
Advertisement
நியோமேக்ஸ் மோசடி வழக்கு; பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லை - நீதிபதி
நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பு எவ்வளவு? , இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்கள் என்ன ? வழக்கின் முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு.
மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூர் கவுதமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு...,”நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல்வேறு பெயர்களில் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பல மடங்கு வட்டி தருவதாக கூறி செயல் பட்டது. ஆனால் முதலீடு செய்த மக்களுக்கு பணம் திரும்ப கொடுக்காமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது இது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் புகார் கொடுத்தனர் இந்த வழக்கில், நிறுவனத்தின் இயக்குநர்கள், ஏஜெண்ட்டுகள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகள் பலர் உடனடியாக ஜாமினில் வெளி வந்துள்ளனர். அதிக வட்டி லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி என்னை இதில் 1 கோடி ரூபாய்
முதலீடு செய்ய வைத்தனர். முதலீடு செய்த நிலையில், கூறியபடி வட்டி இலாபம் , நிலமோ வழங்கவில்லை. முதலீட்டாளர்களின் பணத்தை கல்லூரிகள் மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. தற்போது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மோசடியில் ஈடுபட்டவர்களோடு, வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரிகள் சிலர், உறுதுணையாக உள்ளதாக சந்தேகம் எழுகிறது.
மேலும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதில், காலதாமதம் செய்கின்றனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நிர்வாகிகள் வீரசக்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர் இதுவரை 25 கோடிக்கு மேல் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது மேலும் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி..,”நிதி நிறுவன நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடை பெற்றுள்ளது இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பரிவு காவல்துறை விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நடவடிக்கை போதுமானதாக இல்லை. நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் இன்னும் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?தற்போது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கிய நபர்கள் யார்? நியோமேக்ஸ் நிதி நிறுவன கிளை நிறுவனங்களின் முழு விவரங்கள், அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எத்தனை பேர்? நியோமேக்ஸ் நிறுவனத்தின் கைப்பற்றப்பட்ட சொத்து விவரங்கள், அவற்றின் மதிப்பு எவ்வளவு, இன்னும் கைப்பற்றப்பட வேண்டிய சொத்துக்களின் விவரங்கள் மேலும் தற்போதுவரை புகார் அளித்தவர்களின் விவரங்களை விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion