மேலும் அறிய
Advertisement
Crime: ”மோடி ஸ்கீமில் மாசம் 3 ஆயிரம் ரூபாய் அக்கவுண்டுக்கு வரும்” - 40 பெண்களிடம் நூதன மோசடி
மோடி ஸ்கீமில் மாசம் 3 ஆயிரம் ரூபாய் அக்கவுண்டுக்கு வரும் என 40 பெண்களிடம் மோசடி செய்த இருவரை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அருகே உள்ளது மாயண்டிபட்டி கிராம். இப்பகுதியில் வசித்துவரும் பெண்களாக 40 பேரிடம் விவேகம் கல்வியியல் அறக்கட்டளை என்ற ட்ரஸ்ட் மூலமாக பயிற்றுனராக யாமினி என்ற பெண் மூலமாக சிசிடிவி இன்ஸ்டாலேசன் 45 நாட்கள் பயிற்சிகள் அளித்து சான்று அளிப்பதாக கூறி 40 பேரையும் இணைத்து மாயாண்டிபட்டி சமுதாய கூடத்தில் குமார் என்பவர் மூலமாக பயிற்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து சிசிடிவி இன்ஸ்டாலேசன் வகுப்பு போக மீதியுள்ள நேரங்களில் இலவச தையல் பயிற்சி அளிப்பதாக கூறி அதற்கும் பயிற்சி அளித்துள்ளனர்.
மோடி ஸ்கீமில் மாசம் 3ஆயிரம் ரூபாய் அக்கவுண்டுக்கு வரும் போலி ஆதார், பான் கார்டு, வோட்டர் ஐடி உருவாக்கி 40பெண்களிடம் மோசடி செய்த இருவர் - கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்.#madurai | @mducollector | @SRajaJourno | @SSluwing | #crime |... pic.twitter.com/8PvwzUMjD6
— arunchinna (@arunreporter92) January 23, 2023
மாதம் 3 ஆயிரம்:
அப்போது பெண்கள் பயிற்சி குறித்து கேட்டபோது பயிற்சிபெற்ற பின் சர்டிபிகேட் வாங்கி அதன் மூலமாக பிரதமர் மோடி திட்டத்தில் பட்டியலின பெண்களுக்கான மாதம் 3ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறியுள்ளனர். மேலும் லோன் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து 45நாட்கள் பயிற்சி முடிந்து தேர்வு என கூறி 40 பெண்களையும் குமார் மற்றும் யாமினி ஆகிய இருவரும் மேலூருக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதையடுத்து அங்கு 40 பெண்களிடமும் ஆதார், பான் கார்டு,வோட்டர் ஐடி ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அங்குவைத்தே அவர்களை புகைப்படம் எடுத்து அதனை பயன்படுத்தி போலியான ஆதார், பான் கார்டு, வோட்டோர் ஐடி ஆகியவற்றை தயாரித்து அதனை கையில் வைத்தபடி பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து பெண்களை மிக்சி,கிரைண்டர் சர்வீஸ் செய்வதற்கான பயிற்சி அளிப்பது போலவும் வீடியோ எடுத்துள்ளனர்.
மேலும் சில பெண்கள் கேள்வி எழுப்பிய நிலையில் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் எனவும், அப்போது தான் பயிற்சி சான்றிதழ் பெற முடியும் எனவும் கூறியுள்ளனர். இதன் காரணமாக பெண்களும் அவர்கள் கூறிய ஆவணங்களில் கையெழுத்திட்ட நிலையில் பெண்கள் அளித்த செல்போன் எண்களில் ஓடிபி களை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து சிலருக்கு மட்டும் வீடு தேடிச்சென்று பயிற்சிக்கான சர்டிபிகேட்டுகளை கொடுத்துள்ளனர். அப்போது பெண்கள் யாமினி மற்றும் குமாரிடம் கேட்டபோது உங்கள் பெயரில் லோன் வாங்கியுள்ளதாகவும் அதனை நீங்கள் கட்ட வேண்டாம் வேறு ஒருவர்கட்டிக்கொள்வார் என அனைவரிடமும் தனி தனியே கூறியுள்ளனர்.
போலி ஆதார், பான்கார்டுகள்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தங்களது பெயரில் டெய்லரிங் மற்றும் சிசிடிவி இன்ஸ்டாலேசன் பயிற்சி என கூறி போலியான ஆதார், பான்கார்டுகள், வோட்டர் ஐடிகளை புகைப்படத்தை மாற்றி போலியாக உருவாக்கியதாகவும், மேலும் தங்களின் செல்போனில் இருந்து ஓடிபிகளை வாங்கி கொண்டதாகவும். இதனால் பல லட்சம் ரூபாய் அளவிற்கு தங்களது பெயரில் லோன் வாங்க வாய்ப்பு உள்ளதாகவும், பட்டியலின பெண்களாக தங்களை குறித்து மோடி ஸ்கீமில் பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குமார் மற்றும் யாமினி ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார்மனு அளித்தனர்.
இதனையடுத்து பேசிய பெண்கள் டெய்லரிங், சிசிடிவி இன்ஸ்டாலேசன் பயிற்சி எனவும் மோடி ஸ்கீமில் பணம் வரும் என கூறி தங்களது பெயரில் யாமினியும், குமாரும் மோசடி செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினர்.
மதுரையில் பிரதமர் மோடியின் திட்டத்தில் பட்டியலின பெண்களுக்கான திட்டம் என கூறி போலியான ஆதார், பான் கார்டு, வோட்டர் ஐடியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தொலைபேசியில் விளக்கம் அளித்த யாமினி தான் பயிற்சியாளர் மட்டுமே எனவும், இதுகுறித்து பயிற்சி மையத்தின் நிறுவனர் குமாருக்குத்தான் தெரியும் என்றும் கூறினார். இத தொடர்பாக குமாரிடம் பேச முயன்றபோது அவரது செல்போனை தொடர்புகொள்ள இயலவில்லை.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion