TVK Vijay :மதுரையில் 15 கிலோ கேக் வெட்டி கொடி வெளியீட்டை கொண்டாடிய த.வெ.க கட்சியினர் !
கொடி மற்றும் பாடலை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள த.வெ.க நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
![TVK Vijay :மதுரையில் 15 கிலோ கேக் வெட்டி கொடி வெளியீட்டை கொண்டாடிய த.வெ.க கட்சியினர் ! In Madurai, 15 kg cake was cut and celebrated the release of the flag TVK Vijay :மதுரையில் 15 கிலோ கேக் வெட்டி கொடி வெளியீட்டை கொண்டாடிய த.வெ.க கட்சியினர் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/23/20904715ab750c32d648fe26003f8b381724379812182184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் 15 கிலோ த.வெ.க கொடி பதித்த கேக்கினை வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
த.வெ.க கொடி
சென்னை பனையூர் அலுவலகத்தில் நேற்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் விஜய். சிவப்பு, மஞ்சள் பின்னணியில் இரண்டு போர் யானைகள் கொண்டும் நடுவில் வாகைமலர் கொண்ட லோகோவை கொண்டுள்ளது. பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியை கம்பத்தில் ஏற்றி வைத்தார் விஜய். பின்னர் த.வெ.க. கொடி பாடலும் வெளியிடப்பட்டது. இந்த பாடல் தமிழன் கொடி பறக்குது என்று தொடங்குகிறது.
நம்பிக்கையில் விஜய்
இதைத்தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய் “இன்று நாம் எல்லாருக்கும் சந்தோஷமான நாள். நீங்கள் ரொம்ப நாள் வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க. என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய உங்கள் முன்னாடியும் சரி, தமிழக மக்கள் முன்னாடியும் சரி கொடியை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. இந்த கொடிக்கான விளக்கத்தை கண்டிப்பாக சொல்வேன். புயலுக்கு பின் அமைதி என்பது போல, இந்த கொடிக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. அதுவரைக்கும் சந்தோஷமா கெத்தா கொண்டாடுவோம். இது வெறும் கட்சிக்கான கொடி அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன். இதுவரைக்கும் நமக்காக உளைத்தோம். இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டுக்காகவும் உழைப்போம். இது உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் நான் சொல்லாமலே கொண்டாடுவீங்கன்னு எனக்கு தெரியும். அனைவரையும் மீண்டும் சந்திக்கிறேன். வெற்றி நிச்சயம். நம்பிக்கையுடன் இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதனை விஜயின் ரசிகர் தங்களது கொண்டாட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். மதுரையில் 15 கிலோ கேக் வெட்டி கொடி வெளியிட்டை த.வெ.க கட்சியினர் கொண்டாடினர். கொடி, பேட்ஸ் நிர்வாகிகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)