கழிவுநீர் தொட்டியில் ஆண் குழந்தை.. கட்டுப்பாடுடன் ஜல்லிக்கட்டு.. தென் மாவட்டங்களில் முக்கிய செய்திகள்
கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
1. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நெற்பயிர் காப்பீடு இழப்பீடு வழங்காததை கண்டித்து, 13 கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் நகர் பேருந்துகளை நிறுத்தி வைத்ததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.
3. நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு அரியவகை கனிமங்கள் மற்றும் மணல் கடத்தப்படுவதை தடுக்க சிறப்பு சோதனை சாவடி அமைக்க கோரிய வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது மதுரைக்கிளை.
4. சிறைக்கைதி முனியாண்டி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை தென் மண்டல காவல்துறைத் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
5. இலங்கை கடற்படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் பீதியில் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.
6. நெல்லை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் தமிழக முதல்வரின் மீண்டும் மஞ்சள் பை குறித்து பாளையங்கோட்டை கீழநத்தத்தில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
7. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனை உயிரற்ற நிலையில் கழிவறை தொட்டியில் இருந்து ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8. பொதுப்பணித்துறை கண்காணிப்பில் ஆறு தளங்களில் அதிநவீன வசதிகளுடன், மதுரையில் கலைஞர் நினைவுநூலக கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன. ஓராண்டில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
9. மதுரை மாவட்டத்தில் சில கட்டுப் பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
10. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் கிராமத்தில் நள்ளிரவில் வீடுகளின் கதவை உடைத்து நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்ததில் திருட்டு போனது கவரிங் நகை என தெரியவந்தது. இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 19 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75733-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 5 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 74456-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1187 இருக்கிறது. இந்நிலையில் 90 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.