மேலும் அறிய
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் ; பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
குடும்ப பிரச்னைகள் வாய்தகராறு பிரச்னைகள் மற்றும் பலதரப்பட்ட பிரச்னைகள் சம்மந்தப்பட்ட 223 மனுக்கள் மீது உடனுக்குடன் தீரவு செய்யப்பட்டன.

மதுரை மாநகர காவல்துறை ஆணையர்
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 223 மனுக்களுக்கு உடனடி தீர்வு.
மனு அளிக்கவந்த மனுதாரர்களுக்கு டீ, பிஸ்கெட் கொடுத்து நலம் விசாரித்த பின்னர் புகார் மனு குறித்து கேட்டறிந்த காவல்துறை உயரதிகாரிகளின் நெகிழ்ச்சியான நிகழ்வு.
குறைதீர்க்கும் முகாம்:
மதுரை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்க மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் காவல்நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் நிலுவையில் மனுக்களை உடனடியாக விசாரணை நடத்தி வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் வாரந்தோறும் மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றிவருகிறது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - IND vs AUS 3rd ODI: மார்ஷ், ஸ்மித், லபுஷேன் மிரட்டல்.. வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா... இந்தியாவிற்கு 353 ரன்கள் டார்கெட்..!
அதன்படி இன்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் மாநகர காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், முதியவர்கள் தங்களது மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் ஒவ்வொரு காவல்துறை சரக வாரியாக பிரிக்கப்பட்டு காவல் உதவி ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மனுக்களை விசாரணை செய்தார்கள்.
223 மனுக்களுக்கு உடனடி தீர்வு:
தனி தனியாக வரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதில் குறிப்பிட்ட புகார் குறித்த நிலையை எடுத்துரைத்ததோடு மனுதாரருக்கான தீர்வையும் ஏற்படுத்திகொடுத்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்து அதில் சிறு கொடுக்கல் வாங்கல் பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள் வாய்தகராறு பிரச்னைகள் மற்றும் பலதரப்பட்ட பிரச்னைகள் சம்மந்தப்பட்ட 223 மனுக்கள் மீது உடனுக்குடன் தீரவு செய்யப்பட்டன. மேலும் இந்த முகாமில் புகார் மனு அடிப்படையில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் புதிதாக காவல் ஆணையர் லோகநாதனிடம் 31 பேர். பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இந்த முகாமில் வரும் முதியவர்கள் மற்றும் மனு எழுத தெரியாத முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பெண் காவல்துறையினர் மூலமாக புகார் மனு எழுதிகொடுக்கப்பட்டது. மேலும் முதன்முறையாக புகார் அளிக்க வருகை தந்த பொதுமக்களுக்கு காவல்துறையினர் சார்பில் தேநீரும், பிஸ்கெட்டும் கொடுக்கப்பட்டது.

அப்போது சில பெண்கள் டீ குடித்தபடியே காவல்துறை உயரதிகாரிகளிடம் தங்களது புகார் குறித்து விவரித்தனர். காவல்துறையினர் என்றாலே ஒருவித அச்சத்துடன் பேச பொதுமக்கள் தயங்கிவந்த நிலையில் இது போன்ற முகாம்களால் காவல்துறையினர் மீதான தேவையற்ற அச்சம் நீங்க பொதுமக்கள் - காவல்துறையினரிடையே நட்புணர்வோடு இருக்கும் காட்சிகளும் காண முடிந்தது. இந்த முகாமில் ஒவ்வொரு மனுதாரர்களிடமும் மனு பெற்ற உடனே காவல்துறை அதிகாரிகள் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு மனு குறித்து கேட்டறிந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் நடைபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















