மேலும் அறிய

ODI Worldcup Records: கிரிக்கெட் உலகக்கோப்பையில் கத்துக்குட்டிகளிடம் உதை வாங்கிய ஜாம்பவான்கள்.. டாப் 5 சம்பவங்கள்

ODI Worldcup Records: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மிகப்பெரிய அணிகளை வீழ்த்தி சிறிய அணிகள் அதிர்ச்சி கொடுத்த, வரலாற்றின் முக்கிய சம்பவங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் சிறிய அணியிடம் வலுவான அணிகள் தோல்வியுற்ற, முதல் 5 போட்டிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகக்கோப்பை தொடர்:

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா,  அக்டோபர் 5-ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி இந்தியாவின் 10 நகரங்களில் கோலாகலமாக நடைபெற உள்ளது. உள்ளூர் அணியான இந்தியா தொடங்கி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட இருப்பதோடு, ஏற்கனவே உள்ள பல சாதனைகளும் முறியடிக்கப்பட உள்ளன. அதேநேரம், எதிர்பாரத விதமாக வலுவான அணிகள் கூட சில சிறிய அணிகளிடம் தோல்வியை சந்திக்கலாம். அந்த வகையில் உலகக்கோப்பை தொடரில் கத்துக்குட்டிகளிடம், வலுவான அணிகள் தோல்வியுற்ற முதல் 5 சம்பவங்களை இந்த தொகுப்பில் அறியலாம். 

01. இங்கிலாந்தை வீழ்த்திய ஜிம்பாபே:

1992ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மார்ச் 18 ஆம் தேதி அல்பரியில் நடந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபே அணி 46.1 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜிம்பாபேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 49.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்களுக்கு சுருண்டது. இதனால், 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாபே வெற்றி பெற்று, இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அன்றைய தேதிக்கு, ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாபே அணிக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி அதுவாகும். 

02. மேற்கிந்திய தீவுகளை அலறவிட்ட கென்யா:

1996ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பிப்ரவரி 29ம் தேதி நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், கென்யா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி, 49.3 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, கென்யா பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். இதனால், மேற்கிந்திய தீவுகள் அணி 35.2 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் கென்யா அணிக்கு கிடைத்த முதல்  வெற்றி இதுதான். 

03. பாகிஸ்தனை வீழ்த்திய வங்கதேசம்:

1999ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மே மாதம் 31ம் தேதி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக வங்கதேசம் அணி, ஸ்காட்லாந்திற்கு எதிரான ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. அதேநேரம், பாகிஸ்தான் அணி தான் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. இதனால், வங்கதேச அணியையும் பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை சேர்த்தது. ஆனால், இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சீட்டுக்கட்டைப் போல சரிந்தது. இதனால், 161 ரன்களுக்கு எல்லாம் அந்த அணி ஆல்-அவுட் ஆக, வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

04. இலங்கையை வீழ்த்தி கென்யா வெற்றி:

2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்ற போட்டியில், இலங்கை மற்றும் கென்யா அணிகள் மோதின. இந்த போட்டிக்கு முன்பாக விளையாடிய 3 லீக் போட்டிகளிலும் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இதனால், கத்துக்குட்டியான கென்யா உடனான இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. முதலில் பேட்டிங் செய்த கென்யா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள இழந்து, 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த இலக்கை இலங்கை அணி எளிதில் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் 45 ஓவர்களில் 157 ரன்களை சேர்ப்பதற்குள் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. கென்யா சார்பில் சிறப்பாக பந்துவீசிய காலின் ஒபுயா 10 ஓவர்களில் வெறும் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

05. பாகிஸ்தானை அடித்து அயர்லாந்து வெற்றி:

2007ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மார்ச் 17ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில், கட்டாயம் வெற்றி தேவை என்ற சூழலில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, அயர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், 45.4 ஓவர்களில் வெறும் 132 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி நிதானமாக விளையாடி, 41.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. டெஸ்ட் போட்டி விளையாடும் ஒரு நாட்டிற்கு எதிரான, ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி வென்றது அதுவே முதல்முறையாகும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Embed widget