மேலும் அறிய
Advertisement
புத்தாண்டு கொண்டாட்டம்; வழிபாட்டுத்தலங்களில் குழப்பம் விளைவிக்க முயன்றால் கைது - மதுரை காவல் ஆணையர்
அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழிபாட்டுத்தலங்களில் குழப்பம் விளைவிக்க முயன்றால் கைது செய்யப்படுவர், பைக் ரேஸ் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். புத்தாண்டு தினத்தையொட்டி 31ம் தேதி இரவு பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் மதுரையில் பல்வேறு கட்டுப்பாட்டுகளை விதித்து மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளிலேயே குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் 1300 காவல்துறையினர் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும், இரவு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸில், மது அருந்தி வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோன்று புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழிபாட்டுத் தலங்களில் குழப்பம் விளைவிக்க முயன்றால் கடும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வெளியூர்களுக்கு செல்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் பூட்டிய வீட்டருகில் காவல் ரோந்து ஏற்பாடு செய்யப்படும் என குறிப்பிடபட்டுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களில் காவல்துறையின் நிபந்தனைகளையும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும், பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான முறையில் பைக்கை இயக்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. இதேபோன்று பொதுமக்கள் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் , அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
திருவண்ணாமலை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion