என்னை விமர்சிப்பவர்கள் அந்த ஈடுபாட்டை சமூக பிரச்னைகளில் காட்டினால் நாடும், வீடும் வளம்பெறும் - செல்லூர் ராஜூ
“இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்னைகளில் காட்டினால் நாடும் வீடும் வளம்பெறும்”
செல்லூர் ராஜூ
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லூர் ராஜூ. இவர் ஒரு தமிழக அரசியல்வாதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர். இவர் 2011ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து, 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
வைரலாகும் புகைப்படம்
இந்நிலையில், செல்லூர் ராஜூ அவரது குடும்பத்தினருடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு புலி வாலை பிடித்தபடி ஒரு புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
— Sellur K Raju (@SellurKRajuoffl) March 18, 2023
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புலியுடன் இருக்கும் படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அதோடு இல்லாமல் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தும் டிரோல் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ள முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,
வணக்கம் trollers and haters. உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளில் காட்டிணால் நாடும் வீடும் வளம்பெறும்.🙏🏻
— Sellur K Raju (@SellurKRajuoffl) March 20, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்