மேலும் அறிய
watch video: பிரதமர் மோடி வடிவில் ஹிட்லர் நடமாடுகிறார் - அமைச்சர் பெரியகருப்பண் விமர்சனம்
மோடி எனும் பெயரில் ஹிட்லர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் பெரிய கருப்பண் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் பெரியகருப்பன்
மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொரு கட்சிகளும் தங்களது எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
குற்றவாளிகளை சேர்க்கும் அண்ணாமலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எல்லோருக்கும் எல்லாம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் பகுதியில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பேசினார்.
அப்போது,” பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் சட்ட ஒழுங்கை காப்பாற்றினாரோ இல்லையோ தமிழக பாரதிய ஜனதா தலைவரான பிறகு சமூக விரோத காரியங்களில் ஈடுபட்டு முத்திரை பெற்ற குற்றவாளிகள் அனைவரையும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கின்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார் என்றார்.
#sivagangai | ஹிட்லர் இன்னும் இறந்து விடவில்லை மோடி வடிவில் நடமாடிக் கொண்டிருக்கிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில்
— arunchinna (@arunreporter92) March 3, 2024
பேச்சு ! இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.@LPRABHAKARANPR3 | #abpnadu | @k_for_krish | @OfficeOfKRP | @arivalayam @abpmajhatv pic.twitter.com/oL9gmZEVzl
மேலும் ஜனநாயகத்தின் போர்வையில் சர்வாதிகார ஆட்சியை மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது என்றும் ஈடி, வருமான வரித்துறை, போன்றவர்களை வைத்து நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கின்றனர் நெருக்கடி காலங்களை சந்தித்த இயக்கம் தான் திமுக என்றும் அழிப்போம், ஒழிப்போம் என்பதெல்லாம் அரசியல்வாதி, பல பொறுப்புகளை வகித்தவர் வாயில் இதெல்லாம் வரக்கூடாது என்றும் இது மிகப்பெரிய ஆபத்தை இந்தியா அழைத்து செல்வதற்கு அர்த்தம் என்றார். ஹிட்லர் இன்னும் இறந்துவிடவில்லை மோடி வடிவில் நடமாடிக் கொண்டிருக்கிறார். ஹிட்லரை வீழ்த்தியது போல் இந்திய மக்கள் மோடிய வீழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Roshini : அபிராமி அபிராமி ! என உருகிய கமல்... 'குணா' பட நாயகி ரோஷிணி இப்போ என்ன செய்கிறார்?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Mettur Dam : மேட்டூர் அணையின் நீர்வரத்து இரண்டாவது நாளாக 42 கன அடியாக நீடிப்பு.. நிலவரம் இதோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
ஆட்டோ
உலகம்
Advertisement
Advertisement