தொடர்ந்து அதிகரிக்கும் அணையின் நீர்வரத்து.. முல்லை பெரியாறு உட்பட தேனி மாவட்ட அணைகள் நிலவரம்!
முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப்பகுதியில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 259 கன அடியாக அதிகரித்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதற்கிடையே இன்று முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.80 அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 256 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீர் வரத்தானது 50 கன அடியாகவும் உள்ளது.
வெயிலின் தாக்கத்தை தணிக்க தொடங்கியது தர்பூசணி சீசன் - தேனியில் களைகட்டும் விளைச்சல
தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.
வைகை அணை
நிலை- 53.97 (71)அடி
கொள்ளளவு:2555 Mcft
நீர்வரத்து: 163 கனஅடி
வெளியேற்றம் : 72குசெக்வெசிட்டி:2511 Mcft
மஞ்சலார் அணை:
நிலை- 37.05(57) அடி
கொள்ளளவு:149.08Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்
சோத்துப்பாறை அணை:
நிலை- 44.94 (126.28) அடி
கொள்ளளவு: 12.82 Mcft
நீர்வரத்து: 13.76 கனஅடி
வெளியேற்றம்: 3 கனஅடி
சண்முகநதி அணை:
நிலை-27.20 (52.55)அடி
கொள்ளளவு:18.46 Mcft
வரத்து: 0 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.