மேலும் அறிய

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார் முழு விபரம் இதோ..!

ஆந்திரா மாநில கஞ்சா விற்பனையாளர்கள் மூன்று பேர் கைது. தேனி மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.

ஆந்திரா மாநில கஞ்சா விற்பனையாளர்கள் மூன்று பேர் கைது. தேனி மாவட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை. கஞ்சா குற்றவாளிகளின் சொத்துக்கள் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்.

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார்  முழு விபரம் இதோ..!

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று   21.6 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து வந்து  அதனை தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், விருதுநகர் மாவட்டத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில்  ஈடுபட்டு வந்த ஆறு பேர்  கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நிரஞ்சன்,  சரவணக்குமார் ஆகியோர்களின் கோரிக்கையின்படி   மகாலட்சுமி, ஈஸ்வரி ஆகியோர் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு கஞ்சா வாங்கச் சென்றது வெட்டவெளிச்சமானது.

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார்  முழு விபரம் இதோ..!

வாங்கப்பட்ட கஞ்சாவை அவர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள சாத்தூரில் உள்ள சிறுவியாபாரிகளுக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. நிரஞ்சன், மகாலட்சுமி, ஈஸ்வரி, ஆகியோர் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சென்று பெயர் தெரியாத ஒரு நபரைச் சந்தித்து பணம் கொடுத்து கஞ்சாவை தேனி மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.  இந்த வழக்கை   விசாரிப்பதற்கு  சார்பு ஆய்வாளர்  கதிரேசன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கபட்டு  ஊர் பெயர் விவரம் தெரியாத குற்றவாளியைப் பிடிக்க ஆந்திர பிரதேச மாநிலம் விஜயநகரத்திற்கு இந்த தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டது.

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார்  முழு விபரம் இதோ..!

தனிப்படையினர் விஜயநகரத்தில் 2 வாரங்கள் தங்கி இருந்து உள்ளூர் காவல் அதிகாரிகளின் உதவியோடு அத்தனிப்படை கஞ்சா மொத்த விற்பனையாளர்களைக் கண்டுபிடித்தனர்.  கஞ்சா விற்பனை ஈடுபட்டவர் பெயர் சிவக்குமார் என்றும் அவருடன் மல்லேஸ்வர் ராவ், விஜயபாபு ஆகியோர் அவனது கூட்டாளிகள் என்பதையும் தனிப்படையினர் அடையாளம் கண்டனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு கஞ்சா மொத்த விற்பனை செய்து வந்த அந்த மூன்று குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர்.

மேலும்  அவர்களிடம் இருந்த 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அந்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்த காரையும் பறிமுதல் செய்தனர். ஆறு பெயர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கஞ்சா விற்பனையின் பிறப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்த மூவரையும் இந்த தனிப்படையினர் கைது செய்தனர்.

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார்  முழு விபரம் இதோ..!

மேலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து செயல்படும் கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் எக்காரணம் கொண்டும் தப்பித்து விடக் கூடாது என்பதற்காக, வணிக ரீதியிலான பெருமளவு கஞ்சா பறிமுதல் செய்யப்படும் வழக்குகளில், மொத்த குற்றப் பின்னணியும் குற்றத்தின் சங்கிலித் தொடரும் ஆய்வு செய்யப்பட்டு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு எதிரிகளை கைது செய்யப்பட்டுள்ளது.

இக்குற்றங்களில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுடைய மொத்தம் 7 வங்கிக் கணக்குகள் முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,

தேனியிலிருந்து சென்று ஆந்திர கஞ்சா வியாபாரிகளை தட்டித்தூக்கிய போலீசார்  முழு விபரம் இதோ..!

அதுமட்டுமல்லாமல் அவர்களின் பணப் பரிவர்த்தனைகள் முழுவதும் விசாரணை செய்யப்பட்டு, அனைத்தையும் முடக்குவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அசையா சொத்துக்கள் ஆய்வு செய்யப்பட்ட அதனையும் முடக்குவதற்கு விசாரணையும் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் விற்பனைகள் மேற்கொள்ளப்படும் எனவும்  பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். மேலும் கள்ளசாராயம், சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆன்லைன் கூரியர் மூலம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதோடு தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget