மேலும் அறிய

பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை - அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை

பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

பாலியல் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- உயர்நீதிமன்ற மதுரை கிளை

விருதுநகர் அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த தனது மகன் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே எனது மகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை விடுவிக்க வேண்டும் என்று தந்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்

இந்த வழக்கானது நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ் மற்றும் நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தத

மனுதாரர் தரப்பில் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விடுவித்து உத்தரவிட வேண்டும் என்று வாதிக்கப்பட்டது

அரசு தரப்பில் இந்த வழக்கை விசாரித்து இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சம்பந்தப்பட்ட pocso நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் மகன் மீது பதியப்பட்ட குண்டாசை வழக்கை ரத்து செய்து அவரை விடுவித்தும் உத்தரவிட்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து

தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இளைஞர்கள் மனதில் பல்வேறு தாக்கத்தினை ஏற்படுத்துகிறது இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களும் 18 வயது உடையவர் மற்றும் அதற்கு கீழ் உடையவர்களே ஆனால் தற்போது இவர்கள் பாலியல் குற்றவாளிகளாக பார்க்கப்படுகின்றனர்

 தற்போது உள்ள இளைஞர்கள் மொபைல் போன்களின் மூலமாக ஆபாச படங்களை பார்த்து மனக்குழப்பம் ஏற்பட்டு பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்கள் அவர்களின் மனநிலைகள் சரி செய்யப்பட வேண்டும் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைப்பது அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல.

குற்றச் செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் இளைஞர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களின் மனதில் ஏற்பட்ட தவறான சிந்தனைகளைக் கலைத்து மீண்டும் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதுவாக அமைய வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் பரிந்துரைத்துகின்றது 

மேலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் எதிர்காலத்தில் பெரும் குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களாக மாறிவிட கூடும் என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தனர்

மற்றொரு வழக்கு

கபடி போட்டி நடத்த அனுமதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில், திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணை செய்த நீதிபதி கபடி போட்டி நடத்த கடும் கட்டுபாடுகளை  விதித்து  அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள்  அல்லது அரசியல் தலைவர்களின் படங்களோ ஜாதியை ரீதியான அடையாளங்களோ இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் ஜாதியை ரீதியான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது  போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதியை கட்சிகளின் புகைப்படங்களோ பிளக்ஸ் பேனர்களோ இருக்க கூடாது.

கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு அனைத்து  முதலுதவிக்கான சிகிச்சைகள் உபகரணங்கள் இருக்க வேண்டும். விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை  செய்து கொடுத்திருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களோ மதுவோ அறிந்திருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறும் வகை போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அவர்கள் மீது நடவடி நடவடிக்கை எடுத்து போட்டியை  நிறுத்தலாம் என கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget