தேனி : ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலம்.. ஞானாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..
உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் உத்தமபாளையம் அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா. உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவிலின் சிறப்பு;
தேனி மாவட்டம் உத்தமபாளையம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவில் இந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது. உத்தமபாளையம் நகர சுரபி நதிக்கரையில் வீற்றிருக்கும் தென் காலஹஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை திருக்காளாத்தீஸ்வரர் கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாகும்.
மதுரை தொகுதியில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கப் போகும் வேட்பாளர்கள் யார் தெரியுமா?
ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி:
இக்கோவில் ராகு கேது கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாக விளங்குகிறது.இக்கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்ததை இதனை அடுத்து இன்று திரு குடமுழக்கு நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 15 ஆம் தேதி அனுக்கை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகபூஜை, இரண்டாம் காலயாக பூஜை, மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் காலயாக பூஜை மற்றும் ஐந்தாம் காலயாக பூஜைகள் நேற்று தினம் வரை நடைபெற்று இன்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வசனம், ஆறாம் கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
Panguni Uthiram: "சிவன் முதல் முருகன் வரை" - பங்குனி உத்திரம் நன்னாளில் நடந்த தெய்வ திருமணங்கள்!
கும்பாபிஷேகம் :
அதனைத் தொடர்ந்து பரிவார பூரணாஹதி நடைபெற்று ப்ரதான மகாபூர்ணஹீதி, தீபாராதனை, யாத்ரா தானம் உடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.தொடர்ச்சியாக 10 மணி அளவில் ராஜகோபுரம் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர், அருள்மிகு ஞானாம்பிகை, அருள்மிகு சண்முகநாதர் மற்றும் பரிவாரங்களின் விமானங்கள், ஆகியவற்றுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு ஞானாம்பிகை சமேத திருக்காளாத்தீஸ்வரர் மூலாலய மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக நிகழ்வில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர்.இந்த கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.