மேலும் அறிய

”எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது” - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

தன் உழைப்பால் மக்களுக்கு உழைக்கும் எடப்பாடியாருக்கு விளம்பர வெளிச்சம் என்றாலே தெரியாது - ஆர்.பி.உதயகுமார்

விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சியை நடத்திக் கொண்டு சர்க்கஸ் கூடாரம் போல ஆட்டம் ஆடும் அரசாக ஸ்டாலின் அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
 
ஆர்.பி.உதயகுமார்
 
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ஜனநாயகத்தின் அடித்தளம் சமதர்மமாகும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற கொள்கை, கோட்பாடு என்பது இன்றைக்கு எங்கே போனது என்று தெரியவில்லை. பொது வாழ்வில் ஈடுபட்டவர்கள் இனி அரசியல் அதிகாரத்தில் ஈடுபட முடியாது., என்பதை தான் இன்றைக்கு முத்துவேல் ஸ்டாலின் குடும்பம் சொல்கிறது. ஸ்டாலின் குடும்பம் தமிழக மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவென்றால்? தேர்தல் என்றாலும் சரி, சேவை என்றாலும் சரி.. இதற்கான அதிகாரம் எல்லாம் ஒரு குடும்பத்துக்கு சொந்தம், யாரும் கேள்வி கேட்க முடியாது. என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
 
தினந்தோறும் பாலியல் தொல்லை, கொலைகள்
 
இன்றைக்கு போதை பொருள் நடமாட்டம் சந்தி சிரிக்கிறது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது, விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது, மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது, பாலியல் தொல்லை, கொலைகள் தினந்தோறும் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் கேள்விக்கு வைக்க கூடாது, என்ற நிலை உள்ளது. இன்றைக்கு வெளிநாட்டு அந்நிய முதலீடுகளில் தமிழகம் பின்தங்கி செல்கிறது. நாட்டின் நடக்கும் அவலங்களை குறித்து நாள்தோறும், எடப்பாடியார் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார். ஆனால் ஸ்டாலின் எதுவும் நடைபெறாது போல உள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் முழுமையாக உள்ளது, என்று கூறிக்கொண்டு உண்மை நிலை என்று தெரியாமல் உள்ளாரா? என தெரியவில்லை. ஆனால் கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகத்தை முதன்மையாக்கியுள்ளார்.
 
தமிழக மக்கள் இனி விழிப்பாக இருக்க வேண்டும்
 
2026 சட்டமன்றத் தேர்தலில் இதற்கெல்லாம் தகுந்த பாடங்களை மக்கள் புகட்ட வேண்டும். மக்கள் வருகின்ற தேர்தல் காலங்களில் எச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அரசியல் விழிப்புணர்வு கேள்விக்குறியாக எழுந்துள்ளது. தமிழக மக்கள் இனி விழிப்பாக இருக்க வேண்டும். இன்றைக்கு தமிழகத்தில் மக்களின் முதல்வராக இருக்கும் எடப்பாடியார்  உழைப்பால் உயர்ந்து வருகிறார். இவருக்கு விளம்பரம் வெளிச்சம் என்பதே தெரியாது ?
 
 விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சி
 
ஆனால் ஸ்டாலின் விளம்பர வெளிச்சத்தால் மட்டும் ஆட்சி நடத்திக் கொண்டு, சர்க்கஸ் கூடாரம் போல ஆடும் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் தான் 2026 ஆகும். ஆகவே சர்க்கஸ் கலைகளை ஸ்டாலின் கற்றது திறமைக்காகவா? அல்லது தங்களின் வாழ்வாதாரத்திற்கவா?  இன்றைக்கு ஜிமிக்கி ஜிக்கா போல ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் ஆட்சிக்கு மாற்றத்தை கொண்டு வந்ததால் உண்மை நிலைதெரியும்.  எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற சமதர்மத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றால், மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைந்ததால் உருவாகும். இன்றைக்கு வரலாற்று வளர்ச்சி இருக்கிறது என்று, குழி தோண்டி புதைக்கின்ற பொய்யர்கள் ஆட்சி இனி தமிழகத்தில் இருக்காது. மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் தலைமையில் ஜனநாயக ஆட்சிமலரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget