மேலும் அறிய
Advertisement
மதுரை விமான நிலையம் உள்ளிட்ட 5 விமான நிலையங்கள் 24 மணி நேர சேவைக்கு அனுமதி
மதுரை விமான நிலையம் 24x7 இரவு நேர பயண சேவைக்கு தயாராக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை விமான நிலையம் உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்கள் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை துவக்க, அடிப்படை வசதிகள் பணியாளர்கள் நியமிக்க விமான போக்குவரத்து பரிந்துரை செய்துள்ளது.
மகிழ்வான செய்தி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) January 12, 2023
வரும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து
மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமானநிலையமாக மாறும்.
புதிய அறிவிப்புக்கு நன்றி.@JM_Scindia @aaimduairport pic.twitter.com/KoyPEZMlb6
மதுரை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவை தற்போது இலங்கை துபாய், சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகிறது. மேலும் லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், மலேசியா, ஜப்பான், போன்ற நாடுகளுக்கான விமான சேவைகள் நடைபெறவும், தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் இயக்கப்படுகிறது. மேலும் இரவு நேர உள்நாட்டு விமான சேவையுடன் வெளிநாட்டு விமான சேவைகள் துவங்க மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அகர்தலா, இம்பால், மதுரை, போபால், சூரத் ஆகிய நகர விமான நிலையங்கள் வரும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை துவங்க அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட ஐந்து விமான நிலையங்களில் 24 x 7 மணி நேர சேவைக்காக விமான வான் போக்குவரத்து கட்டுபாடு, (ஏர்போர்ட் டிராபிக் கண்ட்ரோல்,) மற்றும் வலைதல தொடர்பு சேவை (கம்யூனிகேஷன் நெட்வொர்க் சர்வீஸ்) ஆகிய பிரிவுகளில் ஆட்கள் பணி நியமனம் செய்வதும் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு பணியிட நிரப்புதல் ஆகியவை குறித்தும் ஒப்புதல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையம் 24x7 இரவு நேர பயண சேவைக்கு தயாராக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion