மதுரை : சாதி, மதங்களை கடந்து உற்சாகமாக நடைபெற்ற மேலவளவு மீன்பிடி திருவிழா..
மேலூர் அருகே மேலவளவில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா : ஏராளமானோர் பங்கேற்று நாட்டுவகை மீன்களை பிடித்து உற்சாகம்.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த மேலவளவு கருப்பு கோயிலுக்கு முன்பாக உள்ள பறம்பு கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் , மும்மாரி மழை பொழியவும் விவசாயம் செழிக்க வேண்டியும் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மேலவளவு சோமகிரி மலை அடிவாரத்தில் உள்ள பறம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று அதிகாலையில் நடைபெற்றது.
#மதுரை மேலூர் அருகே மேலவளவு கிராமத்தில் உள்ள பறம்பு கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமானோர் வலை, கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு நாட்டுவகை மீன்களை போட்டிபோட்டு பிடித்து உற்சாகம் காட்டினர்.@SRajaJourno |@UpdatesMadurai | @Act4madurai pic.twitter.com/80yMnJGQdC
— Arunchinna (@iamarunchinna) May 28, 2022
#JUSTIN | மீன்பிடி திருவிழா : ஏராளமானோர் பங்கேற்று மீன்களை பிடித்தனர்!https://t.co/wupaoCQKa2 | #Madurai #melur #tamilnadu pic.twitter.com/ckrKlUssgV
— ABP Nadu (@abpnadu) May 28, 2022