மேலும் அறிய
பெண் காவலருக்கு சக காவலரால் பாலியல் தொல்லை -மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை
ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், எஸ்ஐ மற்றும் காவலர்கள் அந்தஸ்தில் கீழ் நிலையில் உள்ளவர்களால் எப்படி புகார் அளிக்க முடியும்

காவல்துறை
திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவர் வீரகாந்தி. இவர், பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல்களை அனுப்பியதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வீரகாந்தி, மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிசங்கர்," பணியிட பாதுகாப்பு என்பது பெண்களின் சட்டப்படியான உரிமை. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கவே தனி சட்டமும் கொண்டு வரப்பட்டது. ஐபிஎஸ் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிக்கே இந்த நிலை என்றால், எஸ்ஐ மற்றும் காவலர்கள் அந்தஸ்தில் கீழ் நிலையில் உள்ளவர்களால் எப்படி புகார் அளிக்க முடியும்.

வழக்குப் பதிவு செய்வதால் மட்டுமே இழிவு நீங்கி விடாது. ஆண்களுக்கு அடுத்தபடியாகவே, பெண்களை பார்ப்பது வருந்தக் கூடியதே. மனுதாரர் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய தகவல்களின் ஸ்கிரீன் ஷாட் விபரத்தை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் மீதான குற்றசாட்டில் போதிய முகாந்திரம் உள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. மனுதாரர் மீதான புகாரை சாதாரண எடுத்துக் கொள்ள முடியாது. விசாரணை நிலுவையில் உள்ளதால், தற்போதைய நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளார்
உண்மையை மறைத்து ஆட்கொண்டர்வு மனு தாக்கல் - கணவருக்கு 25,000 அபராதம்
சிவகாசியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், வீட்டில் இருந்த என் மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிவகாசி கிழக்கு போலீசில் புகார் அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, என் மனைவி மற்றும் குழந்தைகளை மீட்டு ஆஜர்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்.என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், மனுதாரர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில், மனுதாரரின் மனைவி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி, தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாததால் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இருவரும் எழுதி கொடுத்துள்ளனர். இதை மறைத்து தற்போது தன் மனைவியை ஆஜர்படுத்தக் கோரி தவறான தகவல்களுடன் ஆட்கொணர்வு மனு செய்துள்ளார் என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, உரிய நீதிமன்றத்தின் மூலம் பரிகாரம் தேடுவதாகவும் போலீசில் எழுதி கொடுத்ததை மறைத்து மனு செய்துள்ளதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சட்டப் பணிகள் ஆணையத்திற்கு 4 வாரத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion