மேலும் அறிய
Advertisement
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி.. வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு..
வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு குறித்து ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 31 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20 முதல் ஜனவரி 1வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மதுரையிலிருந்து தெலுங்கானாவில் உள்ள கச்சக்குடா ரயில் நிலையத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 07191 கச்சக்குடா - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் கச்சக்குடாவிலிருந்து நவம்பர் 7 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில்
இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 07192 மதுரை - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில் மதுரையிலிருந்து நவம்பர் 9 முதல் பிப்ரவரி 1 வரை புதன் கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மறுநாள் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும். இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம் விருத்தாச்சலம் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூர், மிரியால்குடா, நளகொண்டா, மல்காஜ்கிரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion