மேலும் அறிய
Advertisement
ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: தமிழக-கேரள எல்லையில் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
இரு மாவட்ட எல்லை பகுதிகளான குமுளி , கம்பமெட்டு , போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார துறையினரால் கண்காணிக்க உத்தரவு
ஒமிக்ரான் தொற்று பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புதிதாக நுழைந்துள்ள ஒமிக்ரான் தொற்றால் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்திலும் ஒமிக்ரான் தொற்று பரவாமல் இருக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக பல இடங்களுக்கு சென்று கொரோனா குறித்த விழிப்புணர்வையும், மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் தொடர்ந்து பொது இடங்களில் வலியுறுத்தி வருகிறார். மேலும், மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று நேரடியாக ஆய்வு செய்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மாவட்ட ஆட்சித் தலைவர், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவது குறித்தும், பொது இடங்களில் உள்ள பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் குறித்தும், முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதித்தும், அப்பகுதியில் நடைபெற்றுவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோத்தலூத்து ஊராட்சி,பிச்சம்பட்டி ஊராட்சி, கன்னியப்ப பிள்ளைபட்டி ஊராட்சி, கதிர்நரசிங்காபுரம் ஊராட்சி, ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். அப்பகுதியில் முகக்கவசம் அணியாத நபர்களை கண்டித்து அபராதம் விதித்தார். குறிப்பாக தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையையொட்டியுள்ள மாவட்டமாக தேனி மாவட்டம் இருப்பதால் இரு மாவட்ட எல்லை பகுதிகளான குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையினரால் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion