Sabarimala: ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்வது ஏன்? படிங்க
காட்டு யானைகள் வெள்ளை உள்ளிட்ட நிறங்களை கண்டால் கோபம் கொள்ளும். மேலும் இந்த கருப்பு, வனதேவதைகளையும் சாந்தி படுத்த உடுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.
இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு மாதங்கள் விசேச மாதங்களாக அமைந்திருக்கிறது. அதே போலதான் கேரள மாநிலத்தில் உள்ள பிரிசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் விசேச மாதமாக கருதப்படுவது கார்த்திகை மாதம்.
ஐயப்ப பக்தர்கள்:
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் கோயில்களில் சரண கோஷங்களை கேட்கலாம். அந்த வகையில் இந்த வருடம் , இந்த மாதம் கார்த்திகை முதல் நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிந்து தங்களது விரதத்தை துவங்கியுள்ளனர். ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள புன்னிய ஸ்தலங்கள் மற்றும் விநாயக பெருமானின் முன்னிலையில் துளசி மாலை அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விரதமிருந்து வருகின்றனர்.
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
அந்த வகையில்தான் தேனி மாவட்டம் சுருளி அருவியில் புனித நீராடி குருசாமி கைகளால் மாலை அணிந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தங்களின் விரதத்தைத் தொடங்கியுள்ளனர். அப்படி ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள் விரதமிருப்பதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் கட்டாயம் குளிக்க வேண்டும். குறிப்பாக கருப்பு ஆடை அணிவது, தினமும் ஒரு வேலை உணவு எடுத்துக்கொள்வது என விரதமிருப்பதற்காக பல்வேறு விதிமுறைகள் உண்டு. ஆடை அணிவது உட்பட, ஐயப்ப பக்தர்கள் அவரவருக்கு சவுகரியமான உடைகளை அணியலாம். அதாவது வேஷ்டி, பேண்ட், அரைக்கால் சட்டை உள்ளிட்டவைகளை அணியலாம்.
ஐயப்ப பக்தர்களுக்காக திறக்கப்பட்ட சத்திரம், புல்லுமேடு பாதைகள்... எந்தெந்த நேரங்களில் செல்லலாம்..!
ஆனால், அவை கருப்பு நிறமாக இருத்தல் வேண்டும். நீலம், காவி உள்ளிட்ட ஆடைகள் அந்த பக்தர் சபரிமலைக்கு எத்தனை ஆண்டுகள் சென்றாரோ? அதை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும். அதுவரை கருப்பு ஆடைதான் அணிய வேண்டும். சபரிமலைக்கு செல்வோர்கள் அதிகம் ஏன் கருப்பு நிறத்தில் ஆடை அணிகிறார்கள் என்று பார்த்தால் கருப்பு வேட்டி அணிந்தே சபரிமலைக்கு பெரும்பாலானவர்கள் வருகிறார்கள். இதற்கு என்ன காரணமாக அதாவது, ஐயப்ப சுவாமியின் பரிவார தேவதையான ஸ்ரீ கருப்பசுவாமி, ஸ்ரீ கருப்பாயி தேவி கருமை நிற ஆடை அணிபவர்கள் ஆவார்கள்.
அவர்களின் வழி பின்பற்றி ஐயப்ப சாமியிடம் செல்லும் பக்தர்கள் கருப்பு நிற ஆடையை அணிகிறார்கள். அதிலும் குறிப்பாக சபரிமலையில் யானைகள் அதிகம் உள்ளன. ஐயப்பன் சன்னிதானத்தை அடைய பெருவழி, சிறுவழி என இரு வழிகள் உள்ளன. இதில் பெரும்பாலானோர் கடினமான பெருவழியையே தேர்ந்தெடுப்பார்கள். நீண்ட தூரம் நடக்க முடியாதவர்கள் சிறுவழியில் செல்வர். அதிலும் பெரு வழியில் அடர்ந்த காட்டுப்பாதையிலும் செல்வார்கள்.
அப்போதெல்லாம் காடுகள் நிறைய ஐயப்பன் கோயிலுக்கு செல்வோருக்கு வழியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் பயபக்தியுடன் சற்று பயத்துடனும் அவர்களுடைய பயணம் இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் யானைகள் அதிகம் உலா வரும். அவை கருப்பு நிறத்தை கண்டால் ஒன்றும் செய்யாது. வெள்ளை உள்ளிட்ட நிறங்களை கண்டால் கோபம் கொள்ளும். மேலும் இந்த கருப்பு, வனதேவதைகளையும் சாந்திப்படுத்த உடுத்தப்படுகிறது என கூறப்படுகிறது.