திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்..... எந்தெந்த பகுதியில் தெரியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை கன்னிவாடி துணை மின் நிலையம், சின்னாளபட்டி துணை மின் நிலையம், வட மதுரை துணை மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நாளை ஒரு நாள் மின் நிறுத்தம்
கன்னிவாடி துணை மின் நிலையத்தில் நாளை புதன்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி, பண்ணைபட்டி, சுரக்காய்பட்டி, தர்மத்துப்பட்டி, சக்கரைகவுண்டன் சாலை, வெள்ளமரத்துபட்டி, கீழ திப்பம்பட்டி, மேல திப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோனி மலை, ஸ்ரீராமபுரம், போலியமனூர், அரசமரத்துபட்டி, குள்ளம்பட்டி, ராமலிங்கம்பட்டி, கட்ட சின்னம்பட்டி, பழைய கன்னிவாடி, குரும்பபட்டி, ராஜா புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கன்னிவாடி மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இதேபோல் காந்திகிராமம் கீழக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதனை தொடர்ந்து காந்திகிராம பல்கலைக்கழகம், சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதிகள், செட்டியப்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணிபுரம், காந்திகிராமம், சாமியார்ப்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அம்பாத்துரை, முருகம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, சிறுமலை, புதூர், தென்மலை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என சின்னாளப்பட்டி மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாமரைப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது. இதையொட்டி தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வடமதுரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை பழனி மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்