குத்தகை எடுப்பதில் தகராறு ? - திண்டுக்கல்லில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை
திண்டுக்கல் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
திண்டுக்கல் சாஸ்திரிநகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் (26) இவர் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிகுளம் என்ற இடத்தில் தனது நண்பருடன் மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்ததார், அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ராகேஷ் சுருண்டு கீழே விழுந்ததார். அப்போது அவரோடு பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - Tamil news | ஆணழகன் பட்டம் வென்ற இன்ஸ்பெக்டர்....முள்படுக்கையில் சாமியார்... இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு...! - தென் மாவட்டங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - கொடைக்கானல் அருகே சந்தேகமான முறையில் மாணவி மரணம் - 3 ஆசிரியர்கள் இடமாற்றம்
அவரை மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அவர் மார்பு விலா எலும்புக்கு கீழ் பகுதியில் நாட்டு துப்பாக்கியின் 6 குண்டுகள் துளைத்து இருந்ததும் அதில் அவர் உயிரிழந்தததும் தெரியவதது. இது குறித்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - இரண்டாக பிரிக்கப்படுகிறதா சேலம் மாவட்டம் ?- கே.என்.நேரு பதில்
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - 5-ஆம் வகுப்பு சிறுமி மர்மமான முறையில் எரிந்து இறந்து கிடந்தது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2-வது நாளாக தீவிர விசாரணை
மேலும் துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் இளைஞர் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்க: - கொடைக்கானலில் மர்மான முறையில் உயிரிழந்த சிறுமி - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ராகேஷின் தந்தையான மாணிக்கம் செட்டிகுளம் பகுதியில் மீன்பிடிப்பதற்கான குளத்தை குத்தகைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் எடுத்திருந்ததும் அதில் போட்டி காரணமாக ஏதேனும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.